பாகம் - 6 பான் கார்டு (PAN - PAN CARD)


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் பான்கார்டு (PAN-Permanent Account Number) பெறுவது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஏற்றுமதி உரிமத்திர்க்கான IE CODE பெறுவதற்கு தேவைப்படும் டாக்குமென்டுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த பான்கார்டு (PAN-Permanent Account Number) மற்றும் பான்கார்டு கவரிங் லெட்டர்.


பான்கார்டு பெற தேவைப்படும் ஆவணங்கள் :

  • உங்களுடைய அடையாளச் சான்று ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் காபி, 
  • ஒரு கலர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

இதற்கென உங்கள் பகுதியில் உள்ள அலுவலகத்திலோ அல்லது பான் கார்டு பெற்றுத்தரும் தரகர்களிடமோ சென்று விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் அதர்கான படிவத்தை பூர்த்திசெய்து அதனை மும்பையில் உள்ள பான் கார்டு வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அப்போது உங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் நம்பருக்கான (Acknowledgement Number) சிலிப் ஒன்று தருவார்கள்.

இதற்க்கு அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ள தொகை தொன்னூற்று நான்கு ரூபாய்தான். சிலர் சற்று கூடுதலாக கேட்பார்கள் இந்த பான் கார்டினை நீங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து அதிகபட்சம் பதினைந்து நாட்களுக்குள் உங்கள் இருப்பிட முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

மேலும், உங்களது மொபைல் எண்ணிற்கு குருந்தகவல் (SMS) ஒன்றும் அனுப்பி வைப்பார்கள்.

அவ்வாறு குருந்தகவல்கள் கிடைக்கப் பெறாதோர், உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அக்னாலட்ஜ்மென்ட் நம்பரைக் கொண்டு www.tin.tin.nsdl.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் உங்களது பான் கார்டின் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றியோடு,  அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

5 comments:

kavitha said...

ரொம்ப நன்றி.

Anonymous said...

Good, keep going...

VASU EMU said...

நன்பருக்கு வணக்கம்
பான் கவரிங்லெட்டர் தொலைந்துவிட்டது மீண்டும் பெருவது எப்படி

Unknown said...

நண்பரே, கவலை வேண்டாம்.மறுபடியும் விண்ணப்பியுங்கள். உங்களுக்கு தொலைந்து போன பான்கார்டின் என்னிலேயே புது பான்கார்டு அனுப்பி வைப்பார்கள்.

Rifaiias said...

Brother ;- pan card ean namela eadukanuma or company namela eadukanuma.