FIEO (Federation of Indian Export Organization)
இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகமான FIEO டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு அமைப்பாகும்.
மேலும் இது ஏற்றுமதியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இயங்கி ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.
இவற்றின் முக்கியமான பயன் என்னவெனில் ஒரு ஏற்றுமதியாளர் குறிப்பிட்ட ஒருசில பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்வதாயின் அந்த பொருளுக்கான குறிப்பிட்ட ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களில் (EPC) உறுப்பினர் (RCMC) ஆனாலே போதும்.
இவைபற்றி ஏற்கனவே ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (EPC) என்ற பதிவில் விரிவாகப் பார்த்திருக்கிறோம்.
ஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகங்களில் இதுவும் ஓன்று.
“ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் எந்த ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினர் ஆக வேண்டும்?”
இதற்கு பதில் மிக எளிது.
நீங்கள் ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகமான FIEO – வில் உறுப்பினர் ஆனாலே போதுமானது.
தனியாக ஒவ்வொரு ஏற்றுமதி மேபாட்டு கழகத்திலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.
உதாரணத்திற்கு நீங்கள் வேளான் மற்றும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்துள்ளிர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
APEDA என்று அழைக்கப்படும் வேளான் மற்றும் உணவுப்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினராக வேண்டும்.
அதே நீங்கள் மூலிகை பொருட்களையும் தற்போது ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது நீங்கள் மூலிகை பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் தனியாக உறுப்பினராக பதிவு செய்ய வேண்டுமா என்று கேட்டால் அது தேவையில்லை.
FIEO – வில் மட்டும் RCMC (Registration Cum Membership Certificate) என்று அழைக்கப்படும் பதிவு பெற்ற உறுப்பினர் சான்றிதழ் பெற்றாலே போதுமானது.
மேலும் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பொருளானது எந்த ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் கீழும் வராத பட்சத்திளும் இதே FIEO – வில் உறுப்பினராகிக் கொள்ளலாம்.
FIEO – வில் உறுப்பினர் ஆவதற்கான வழிமுறைகள் என்னென்ன?
என ஒவ்வொன்றின் தன்மைக்கேற்ப இவற்றில் மொத்தம் 13 வகை உள்ளன.
நீங்கள் ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் Multi-Products Group என்ற வகையின் கீழ் உறுப்பினராகிக் கொள்ளலாம்.
ஒவ்வொன்றுக்குமான கட்டண விபரங்களும் மேல தரப்பட்டுள்ளன.
புதிதாக உறுப்பினர் ஆவதற்கு கட்டணத் தொகையுடன் 1,000 ரூபாயும், சேவை வரியாக 12.36% சேர்த்துக் கட்ட வேண்டியிருக்கும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
Unit No.706, Spencer Plaza, 7th Floor,
769, Anna Salai, Chennai-600 002
Phone : +91-44-28497766/28497755/28493333,
Email : fieosr@fieo.org
Website : www.fieo.org
Toll Free Number : 1800 - 121 - 9000
நன்றியோடு, அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா