EPC


ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (Export Promotion Council)

இது நமது இந்திய அரசால் நமது ஏற்றுமதியாளர்களின் நலன் கருதி உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பாகும், இவைகள் ஒவ்வொறு வகையான பொருளுக்கும் தனித் தனி ஏற்றுமதி மேம்பாட்டு கழகம்  என மொத்தம் 33 வகையான ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள்   உள்ளன. 

இவை ஒவ்வொன்றுக்குமான தலைமை அலுவலகங்கள் குறிப்பிட்ட சில மாநில தலை நகரங்களிலும், அதன் கிளை அலுவலங்கள் மற்ற  ஏனைய இடங்களிலும் இருக்கின்றன. 

அவற்றின் முகவரிகளை வரும் பகுதிகளில் தருகிறேன். அதற்கு முன் இவற்றின் பயன்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். 

# நீங்கள் தேர்வு செய்துள்ள பொருளைப்பற்றிய மேலதிக விபரங்கள்.

# அந்தப் பொருட்களை எந்தெந்த முறையில் மதிப்புக் கூட்டி ( Value Added )
ஏற்றுமதி செய்யலாம் என்ற விபரங்கள். 

# அந்த பொருட்களுக்கான பொதுவான கட்டுதல் ( packing ) முறைகள்
போன்ற   விபரங்கள்.

# அவை உணவுப்பொருட்கள் எனில், அவற்றை எங்கு     பரிசோதித்து, அதற்கான (Inspection Certificate) சான்றிதழைப் பெற வேண்டும் போன்ற விபரங்கள்.

# அந்த பொருளுக்கான வரிசலுகை (Duty Drawback) எத்தனை சதவீதம் போன்ற விபரங்கள்.

# அந்த பொருளுக்கான ஊக்கத்தொகை  (Incentive) எத்தனை சதவீதம் போன்ற விபரங்கள்.

# அந்த பொருளின் தற்போதைய சந்தை விலை (Market Rate) நிலவரம் எவ்வளவு? போன்ற விபரங்கள். 

# அந்த பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு (Importing Countries) போன்ற விபரங்கள்.

# அந்த பொருட்களை அதிகம் வாங்கும் இறக்குமதியாளரின் முகவரி (Buyers Address) போன்ற விபரங்கள்.

என, இன்னும் பல உதவிகளை இந்த ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் நமக்கு செய்கின்றன. 

இவைகளை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்வது? 

அதற்கு, நீங்கள் அந்தந்த பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களில் RCMC (Registration Cum Mempership Certificate) என்று சொல்லப் படக்கூடிய பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் சான்றிதழ்  பெற  வேண்டியது மிக அவசியம்.

 ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களில் உறுப்பினர் ஆவது எப்படி?

முதலில் நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்துள்ள பொருளுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் எது எனக் கண்டறிந்து, அவர்களின் இணையதள முகவரிக்கு சென்று அதற்கான அப்ளிகேஷன் பார்மை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 
  
தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன் பார்மை பூர்த்தி செய்து, அதற்கான கட்டணத் தொகையை  அவர்களால் குறிப்பிடப் பட்டிருக்கும் பெயரில் Demand Draft - ஆக  எடுத்து கொள்ளுங்கள். 

இந்த கட்டணத் தொகையானது ஒவ்வொரு   ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்திற்கும் வேறுபடும்.
     
பிறகு,பூர்த்தி செய்யப்பட்ட அப்ளிகேஷன் பார்முடன் அவர்கள் கேட்டிருக்கும் ஆவணங்கள் மற்றும் Demand Draft - யையும் இணைத்து அவர்களின் அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். 

மேலதிக விபரங்களுக்கு, அந்தந்தப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF