பாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி?

 
நண்பர்களுக்கு வணக்கம்!

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளம் தங்களை அன்புடன் வரவேகிறது.

நாம் நன்றாயிருந்தால் போதும் 
என்று நினைப்பது சுயநலம்...! 
நாடும் நன்றாயிருக்க வேண்டும் 
என்று நினைப்பது பொதுநலம்...! 

இதில் இரண்டாவது வகைதான் இந்த ஏற்றுமதி துறை. இத்துறையை தேர்ந்தெடுத்து இருப்பதிலேயே உங்களின் பொதுநலம் எனக்கு தெரிகிறது. அதற்கே உங்களுக்கு முதலில் கோடானுகோடி நன்றி சொல்ல வேண்டும்.

காரணம், ஏற்றுமதியில்  நாமும் நலம் பெறுவோம் நாடும் வளம் பெரும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சரி நண்பர்களே, வாருங்கள் பதிவைப் பார்ப்போம்.

நீங்கள் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்தபின் முதலில் செய்ய வேண்டியது, அது எந்த வகையான ஏற்றுமதி நிறுவனம் என்பதை தேர்ந்தெடுப்பதுதான்.

பொதுவாக நிறுவனங்கள் என்றுஎடுத்து கொண்டால்,

1.Proprieter, (தனி ஒரு நபராக செயல் படுவது)
2.Partnership, (சிலர் கூட்டாக சேர்ந்து செயல் படுவது)
3.Private limited (பலர்கூட்டாக சேர்ந்து செயல் படுவது)

எனும் இந்த மூன்று வகைகளில்தான் இருக்கும். இதில் எந்த வகை சிறந்தது என்றால்,அது Proprietor ஆகத்தான் இருக்கும். இதில் நீங்கள்தான் முதலாளி. உலகில் என்பது சதவிகிதம் பேர் இந்த வகை ஏற்றுமதியாளர்களே.


இந்த மூன்றில் நீங்கள் எந்த வகையான நிறுவனத்தை தொடங்கபோகிறீர்கள் என்பதை முடிவெடுத்த பின், அடுத்து நீங்கள் என்ன வகையான ஏற்றுமதியாளர் என்பதை முடிவெடுக்க வேண்டும். இதில் இரண்டு வகை உண்டு.

1.Merchant exporter
(பொருட்களை பிறரிடமிருந்து      வாங்கி    ஏற்றுமதி செய்வது)
 
2.Manufacture exporter
(பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது)

இதில், நீங்கள் முதல் வகையான இறக்குமதியாளர் கேட்கும் பொருட்களை, பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்யும் Merchant exporter - ஆக இருப்பதே சிறந்தது.

காரணம், நீங்கள் Merchant exporter - ஆக இருப்பின் எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியும். அதுவே, நீங்கள் Manufacturer export - ஆக இருப்பின் நீங்கள் குறிப்பிட்ட பொருட்களை மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

இவைகளில் நீங்கள் எந்த வகையான ஏற்றுமதி நிறுவனம்அமைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்த பின், இதன் அடுத்த பாகமான நிருவனத்திற்க்குபெயர் வைப்பது எப்படி? என்ற பகுதிக்கு வாருங்கள்.

உதவிக்கு தொடர்பு கொள்ளவும்,

 நன்றியோடு அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

6 comments:

kavitha said...

Merchant exporter, .Manufacture exporter விளக்கம் அருமை. நன்றி

Anonymous said...

good....keep going

Thirumurugan MPK said...

thank u sir

manju tharan said...

Nice sir

manju tharan said...

Nice sir

gopu rathinam said...

Ungalodaaa contact number kedaikkumaaaa....