நண்பர்களுக்கு வணக்கம் !
இந்த பதிவில் உங்களது ஏற்றுமதி நிறுவனத்திற்கு எப்படி பெயர் வைப்பது எப்படி ? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் உங்களது நிறுவனப் பெயர் பொதுவாக எல்லோரும் புரியும் படியாக, குறிப்பாக இறக்குமதியாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருக்க வேண்டும்.
பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த வார்த்தைகளையே நிறுவனப் பெயராய் சூட்டுங்கள். உதாரணமாக AERO,SUN,SKY போன்றவை.
உங்களின் விருப்பமான பெயர்கள், இன்ஷியல்கள் போன்றவைகளைக் கூட தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதில் எந்த வரை முறையும் இல்லை.
உதாரணம் KALAI,KARAN,STS போன்றவை.
அடுத்ததாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயருக்கு பின்னால் EXPORTS, EXPORTS&IMPORTS, INTERNATIONAL போன்ற ஏதேனும் ஒன்று வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு KALAI EXPORTS, S.T.S EXPORTS&IMPORTS போன்றவை.
உங்களது நிறுவனத்திற்கு பெயர் தேர்ந்தெடுத்து விட்டிர்கள் சரி, ஆனால் அதே பெயரில் வேறு நிறுவனம் இருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது? அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
எப்படி ?
முதலில் நீங்கள் சென்னை பகுதியை சேர்ந்தவர் எனில் 044-22222222,699999990 என்ற எண்ணிற்கும் திருச்சி பகுதியை சேர்ந்தவர் எனில் 0431-2222222 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்திரும் பெயரைக் கூறி இந்த நிறுவனத்தின் முகவரி கிடைக்குமா? என்று கேளுங்கள்.
அவ்வாறு ஏதேனும் நிறுவனம் இருந்தால், அவர்கள் நிச்சயம் அதன் முகவரி தருவார்கள். அப்படியேதும் இல்லையெனில் இல்லை என்று கூறி விடுவார்கள்.
மறந்தும் அவர்களிடம் இதே பெயரில் வேறு ஏதேனும் நிறுவனம் இருக்கிறதா? என்று கேட்டு விடாதீர்கள். அவர்கள் உடனே தொடர்பை துண்டித்து விடுவார்கள்.
காரணம், நீங்கள் பெயர் சூட்டத்தான் கேட்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு விடுவார்கள். ஏனெனில், இவர்கள் இதற்கான சேவைகள் அளிப்பவர்கள் அல்ல.
இந்த எண்கள் Just Dial-ன் கஸ்டமர் கேர் எண்களாகும்.
அடுத்ததாக நீங்கள்செய்ய வேண்டியது, இதே பெயர் வேறுநாட்டில் இருந்தால்? அதற்கும் வழி இருக்கிறது.
இணையதள தேடுபொறியான கூகுல் தளத்திற்கு சென்று, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பெயரை டைப் செய்து தேடிகொள்ளுங்கள்.
இவைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பெயர் இல்லாத பட்சத்தில் உங்களது நிறுவனத்திற்கு அந்த பெயரையே தாளாரமாய் சூட்டிக் கொள்ளலாம்.
நன்றியோடு அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா
5 comments:
சென்னை, திருச்சி மட்டும் சொல்லி இருக்கீங்க. நான் ஈரோடு. என்ன செய்வது ?
Cell number plz karuppaiah
ஏற்றுமதி தொடர்பில்லாத வேறு நிறுவனத்தின் பெயர், ஏற்கனவே இருந்தால் அதை பயன்படுத்தலாமா?
Please Mr.karu..can you give me your Contact number.or just call me 9962674858 Thank you.
please..
is there any demerits for my company located in a village.
Post a Comment