பாகம் - 3 ஈமெயில்,லேண்ட்லைன்,ஃபேக்ஸ்

   
நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் நமது நிறுவனத்திற்கான ஈமெய்ல், லேண்ட்லைன் மற்றும் ஃபேக்ஸினை பற்றி பார்ப்போம்.

நாம் ஏற்றுமதி துறை என்று எடுத்து கொண்டால் ஈமெய்ல், ஃபேக்ஸ் இரண்டும் தொலை தொடர்புக்கான அத்தியாவச தேவைகளில் மிக முக்கியமான ஒன்று.

நீங்கள் உங்களது நிறுவனத்துக்கான பெயரை தேர்ந்தெடுத்த பின் GMail, Yahoo போன்ற ஏதேனும் ஒரு வலைதளத்தில், உங்களது நிறுவனப் பயன்பாட்டிற்காக, உங்களது நிறுவனப் பெயரில்  ஈமெய்ல் ஐடி ஒன்றை தொடங்கி கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு : sunexports@gmail.com, moonexports@yahoo.com

அடுத்ததாக, உங்கள் நிறுவன பயன்பாட்டிற்காக லேண்டலைன் தொலைபேசி மற்றும் ஃபேக்ஸ் வசதியினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதில்  BSNL லேண்ட்லைன் என்றால் சற்று சிறப்பு.

காரணம், இதில் தொலைபேசி எண், ஃபேக்ஸ் எண் ஆகிய இரண்டும் ஒரே எண்ணாகவே கிடைக்கும்.

மேலும், ஏர்டெல் போன்ற சில தொலைதொடர்பு நிறுவனங்களும் கூடஇந்த சேவையை வழங்குகின்றன.

சரி நண்பர்களே, லேண்ட்லைன் மற்றும் ஃபேக்ஸ் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு மறவாமல் ஈமெய்ல் ஐடி ஒன்றையும் தொடங்கிகொண்டு அடுத்த பதிவுக்கு வாருங்கள்.

அடுத்த பதிவில், நிறுவனத்திற்கான லெட்டர் ஹெட் எப்படி அச்சடிக்கப்பட வேண்டும்? என்பது பற்றி பார்ப்போம்.

நன்றியோடு அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

4 comments:

Anonymous said...

Narbarukku Enathu Anbu vanakkakkanga....

Neradi vaguppugalil kooda ithu pondra arumaiyana vilakkathai kekka mudiyavillai...thalathin pathuvugal arumai...thodarattum ungal sevaigal..

Muthan muthalil yerrumathi thozhil seyum pothu land line, fax vasathigal avasiyamaga thevaipaduma vilakka malikkavum

Anonymous said...

Thani nabar mattum intha yerrumathi thozhilil eedupada mudiyuma

Avvaru eedupadum patchathil avargalukku yerpadum nadai murai sikkalgal enna.......

Nanbarai tholaipesi moolam thodarbu kollalama

Maris Mari said...

Thanks you

Maris Mari said...

Thanks you