பாகம் - 4 லெட்டர் ஹெட் தயார் செய்வது எப்படி?

 
நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் உங்களது ஏற்றுமதி நிறுவனத்திற்கான லெட்டர் ஹெட் எப்படி இருக்க வெண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலில் உங்களது நிறுவனத்திற்கு என அழகான லோகோ ஒன்றை டிசைன் செய்து கொள்ளுங்கள். இதை கம்ப்யூட்டர் சென்டர்களிலும் கூட டிசைன் செய்து தருவார்கள்.

நீங்கள் டிசைன் செய்யும் லோகோவானது முடிந்தவரை நீங்கள் எந்த பொருளை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களோ அவை சம்பத்தப்பட்டவையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு ஒருவர் பழங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தேடுத்திருப்பார்.ஆனால் அவரது ஏற்றுமதி நிறுவனத்திர்க்கான லோகோவைப் பார்த்தால் அதில் பழங்களுக்குப் பதிலாக மலர்களோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றை  வரைந்திருப்பார்.

உங்களது லோகோவே நீங்கள் என்ன பொருளை ஏற்றுமதி செய்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதாக இருக்க வேண்டும்.

அதற்காகத்தான் சொல்கிறேன் அவர் செய்த அதே தப்பை நீங்களும் செய்யாதீர்கள் என்று.உங்களது நிறுவனத்திற்கு லோகோ டிசைன் செய்யும்போது இதையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, லோகோ டிசைன் செய்தாகி விட்டது அடுத்தது என்ன?

வேறென்ன உங்களது நிறுவனத்திர்க்கான லெட்டர் ஹெட்தான்.

வாருங்கள், உங்களது நிறுவனத்திர்க்கான லெட்டர் ஹெட் எப்படி தயார் செய்வது என்பது பற்றியும் அவற்றில் என்னென்ன இருக்க வேண்டும்  என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

கணினி வைத்திருக்கும் நண்பர்கள் தங்கள் நிறுவனத்திற்கான லோகோ மற்றும் லெட்டர் ஹெட்டை முடிந்தால் தங்களது கணினியிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்.

கணினி இல்லாதோர் ப்ரௌசிங் சென்டர்களில் வடிமைத்திடுங்கள்.

முதலில் MS Word-ல் A4 சைஸ் அளவில் ஒரு பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். அதன் மேற்புறத்தின் இடது பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே  டிசைன் செய்து வைத்திருக்கும் லோகோவை இடுங்கள்.

பிறகு, வலது பக்கம் இருக்குமிடத்தில் உங்களது நிறுவனத்தின் பெயரை அழகான வடிவில் டைப் செய்து கொள்ளுங்கள்.

அதற்கு கீழ் உங்கள் நிறுவனத்திர்க்கான தொலைபேசி எண், ஃபேக்ஸ் எண், மொபைல் எண், ஈ-மெய்ல் ஐடி போன்றவைகளையும் டைப் செய்து கொள்ளுங்கள்.

இவைகளில் எண்களை டைப் செய்யும் போது +91-44-69996999 என்ற முறையில்  டைப் செய்து கொள்ளுங்கள்.

இதில் +91 என்பது நமது இந்தியாவிற்கான கன்ட்ரி கோடு, 44 சென்னைக்கான  STD Code, 69996999 என்பது உங்கள் தொலைபேசி மற்றும் ஃபேக்ஸ் எண்.

இதே முறையில் மொபைல் எண் இடும்போதும்  +91- போட்டு கொள்ளுங்கள் மறந்தும் எண்களுக்கு இடையினில் (+) , (-) குறி போடாமல் விட்டு விடாதீர்கள்.

அடுத்து இவைகளின் கீழ் கோடு ஒன்றை வரைந்திடுங்கள்.

அதன்பின் அந்த A4 சைஸ் பேப்பரின் அடிப்பக்கத்திற்கு வாருங்கள். இங்குதான் உங்களது நிறுவனத்தின் முகவரி இருக்க வேண்டும்.

இதில் கதவு எண், தெரு, அஞ்சல், தாலுகா, மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா, பின் கோடு என்ற வரிசை முறையில் இரண்டு வரிகளாய் வருமாறு டைப் செய்து கொள்ளுங்கள்.

இதில் உங்களது முகவரியின் கதவு எண் இடும்போது கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், உங்களது கதவு எண் 44 எனில் No.44 என்று எழுதாமல் #44 என்று எழுதுங்கள்.

ஏனெனில், உலக நாடுகள் பலவற்றிலும் அவர்களின் கதவிலக்க எண்களை நம்மைப்போல் (No.) என்று எழுத மாட்டார்கள்.

எண்களுக்கு முன் (#) என்றுதான் எழுதுவார்கள். காரணம் No என்பதற்கு மற்றொரு அர்த்தம் இல்லை என்பதாகும். எனவே (#) குறியிட்டே எழுதுங்கள்.

முகவரியை எழுதி முடித்த பிறகு, இறுதியாக அவற்றின் மேற்புரத்தில் கோடு ஒன்றை வரைந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான், உங்களது லெட்டர் ஹெட் தயாராகி விட்டது.

பிறகு அதை எடுத்து கொண்டு பிரிண்டிங் பிரஸ் சென்று உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் A4 Size, Royal execute bond paper - ல் அச்சடித்து வாங்கிகொள்ளுங்கள்.

முடிந்தால் ஒரு 50 என்ற எண்ணிக்கையில் உங்களது லெட்டர் ஹெட்டை மல்டி கலர் அல்லது ஆப்செட் முறையில் அச்சடித்துக் கொள்ளுங்கள்.

இதில் மல்டி கலர் எனில் விலை சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்.

லெட்டர்ஹெட் தயாரிக்கும் போது ஒன்றை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள். இறக்குமதியாலரிடம் நீங்கள் பேசாததையும் சேர்த்து  உங்கள் கடிதம் பேச வேண்டும்.

இதன் தொடர்ச்சியான விசிட்டிங் கார்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வேறொறு பதிவில் பார்ப்போம்.

ஏனெனில், அது இப்போது தேவையில்லை. IE Code எடுத்த பிறகுதான் தேவைப்படும். எனவே அதைப்பற்றிய தகவல்களை அப்போது தருகிறேன்.

அதற்கு முன் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான IE Code-ஐ எப்படி பெறுவது என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

நன்றியோடு அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

13 comments:

kavitha said...

நிறைய பயனுள்ள தகவல்கள். உங்களின் அனைத்துப் பதிவுமே என் மனதில் இருக்கும் சந்தேகத்திற்கான பதிலவே இருக்கிறது.. மனம் நிறைந்த நன்றிகள்

kavitha said...

நிறைய பயனுள்ள தகவல்கள். உங்களின் அனைத்துப் பதிவுமே என் மனதில் இருக்கும் சந்தேகத்திற்கான பதிலவே இருக்கிறது.. மனம் நிறைந்த நன்றிகள்

kavitha said...

சார் குறைன்னு ஒன்னும் இல்ல. ஆனால் நிறைய பதிவை எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

very useful sir thank you

Anonymous said...

any doubt means iam contact you

Ra.THANGAVEL said...

eanacku petithamana oru logo vai leter pad il podumpothu Aathai nanmudaiya wepsite il aathea logo vai podalama? aathrcku eathavathu amound koduckavenduma?

Unknown said...

நண்பரே, அதற்கென நீங்கள் தனியாக கட்டணமும் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.

Unknown said...

Karuppaiya Sir,

Unga Blogsthaan Naan Romba Ethirpaarthaen.....

Very Useful....

Naanum Export Panrathukku Ready Aayitu Irukkaen...

Thanks....

Selvam Ariyalur Dist.

Unknown said...

Dear Sir
Nan export panna virumburean. FOB price CIF endral enna. export panna transport patthi konjam villakam kodunka. nan enka containera rentuku vankarathu?

Unknown said...

Dear Sir
Nan export panna virumburean. FOB price CIF endral enna. export panna transport patthi konjam villakam kodunka. nan enka containera rentuku vankarathu?

Anonymous said...

I am very new to this site Very good posting, news etc. fantastic...My heartiest congrats to you.Continue your service to humanity.....Thank you thank you.
Arasu

Unknown said...

dear sir i will interest to start import/export but not have source what i do and you posting is usefully and understand easy so expect more for you. thank you

Karthick said...

நிறைய பயனுள்ள தகவல்கள். உங்களின் அனைத்துப் பதிவுமே என் மனதில் இருக்கும் சந்தேகத்திற்கான பதிலவே இருக்கிறது.. மனம் நிறைந்த நன்றிகள்