நண்பர்களுக்கு வணக்கம் !
கற்றது கையளவு கல்லாதாது உலகளவு...
ஏற்றுமதி துறை என்றில்லாமல் ஒவ்வொரு துறையிலும் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் எவ்வளவோ இருக்கின்றன.
இன்றைய நவீன உலகில் எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ளவும், தெரிந்துகொள்ளவும் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன.
ஆனால், பலர் அதைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆர்வமிருந்தும், ஆசையிருந்தும் அதற்கான வழி தெரியாமல் திசைமாறி விடுகின்றனர்.
தேடல் இல்லா மனிதன் என்றுமே முழுமையாக மாட்டான்...
தேடுங்கள், விடாது தேடுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்.
மின் புத்தகம் - Electranic Book (PDF Book)
கணிணி பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில் E-Book என்று அழைக்கப்படும் மின் புத்தகங்களின் பயன்பாடும் அத்தியாவசயமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காரணம், ஆயிரமாயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை கூட அரை நிமிடத்தில் உங்களது கணிணியிலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இதனைப் பயன்படுத்துவதும் கூட மிக எளிது.
இவ்வளவு ஏன் வளர்ந்த பல நாடுகளின் பள்ளி, கல்லூரிகள் கூட இப்போதெல்லாம் இந்த மின் புத்தகங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மற்றத் துறைகளைப் போன்றதல்ல ஏற்றுமதி துறை இதில் தினம் தினம் உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.
நமது ஏற்றுமதி வழிகாட்டி தள நண்பர்களுக்காக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில் உள்ள நடைமுறைகள், வழிமுறைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து மின் புத்தக வடிவில் நமது தளத்தில் இனி தொடர்ந்து வெளிவரவிருக்கின்றன.
அந்த வகையில் முதல் மின் புத்தகமாக நமது தளத்தில் வெளிவந்த IE Code பெறுவது எப்படி? என்ற தலைப்பிலான 10 பாகங்களையும் ஒருங்கிணைத்து IE Code பெறுவது எப்படி? என்ற அதே பெயரிலேயே மின் புத்தகமாக உங்கள் பார்வைக்கு பகிர்கிறேன்.
இதனை டவுன்லோட் செய்ய கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
நன்றியோடு அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா
1 comments:
Anna ungalukku muthala ennoda vanakkatha sollikiren...
Ungapathivugal ellam suppara irkku
itha padichavudane enakkum yerrumathi thuraila oru nambika vanthirukku....
irakkumathiyalarkalai enga poi kandu pidikkirathu athukku yeathavathu vali sollunga....
fax, land line cnection ellam avasiyama thevaiya...
Post a Comment