ஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி ?


நண்பர்களுக்கு வணக்கம்!

இந்த பதிவில் "ஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி ? " என்பதைப் பற்றி பார்ப்போம். 

ஏற்றுமதி துறையில் நுழைய நினைக்கும் பெரும்பாலோனர் கேட்கும் முதல் கேள்வி, "ஏற்றுமதி செய்வது எப்படி?" எனில், அவர்கள் கேட்கும்  இரண்டாவது கேள்வி, "எந்த பொருளை ஏற்றுமதி செய்வது ?" என்பதாகத்தான் இருக்கும். 

ஆம்! நம்மில் IE Code எடுத்தும் கூட, ஏற்றுமதி செய்யமால் இருப்போர் எத்தனையோ பேர். காரணம், அவர்களுக்கு எந்த பொருளை ஏற்றுமதி செய்வது ? என்பதில் ஆரம்பிக்கும் குழப்பம், எப்படி லாபகரமாக ஏற்றுமதி செய்வது ? என்பது வரை தொடர்வதால்தான்.

பொதுவாக, ஏற்றுமதி துறையில் வெற்றி என்பது அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொருளைப் பொருத்தும்,   அந்த பொருளின் தரத்தை பொருத்தும்தான் அமையும். பிறகுதான் மற்றெதெல்லாம்.

ஏற்றுமதி தொழில் செய்ய முடிவெடுக்கும் முன், முதலில் எந்த பொருளை ஏற்றுமதி செய்யப் போகிறோம் ? என்பதில் தெளிவாக இருங்கள்.  

நீங்கள், இந்த ஒரு பொருளை மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்று  எந்த ஒரு வரைமுறையும் இல்லை. இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரத்தால் ( Director General of Foreign Trade ) தடை செய்யப் படாத எந்த ஒரு பொருளையும் நீங்கள் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம்.

தற்போதைய நிலவரப்படி,  இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரத்தால் ( DGFT ) ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை சுமார் 11630-க்கும் மேல், எனவே கவலை வேண்டாம். சரி, விஷயத்துக்கு வறுவோம்.

முதலில், நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுக்கும் பொருளானது,முடிந்த வரை உங்களுக்கு நன்கு தெரிந்த, நன்கு பரிச்சியமான பொருளாக  இருக்குமாறு  பார்த்து கொள்ளுங்கள். காரணம், உங்களுக்கு அதனைப் பற்றிய விபரங்கள் ஏற்கனவே தெரிந்திருக்கும்.

அவ்வாறில்லாமல் வேறு பொருட்களை தேர்ந்தேடுப்பதாயினும் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதனைப்பற்றிய முழு விபரங்களும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்.

அடுத்து, அந்த பொருளானது உங்களுக்கு வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில், வேண்டிய தரத்தில் தங்களுக்கு கிடைக்குமா? என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஏனெனில், எந்த ஒரு இறக்குமதியாளரும் தங்களிடம் முதலில் கேட்பது, அந்த பொருளை பற்றிய முழு விபரங்களைத்தான். பிறகுதான் மாதிரி (Sample), ஒப்பந்தம் ( Contract ) எல்லாம். 

எனவே, நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்துள்ள பொருளை பற்றிய கீழ்வரும் அனைத்து விபரங்களையும், கண்டிப்பாக தெரிந்து வைத்திருங்கள்.
  
  (1) அதன் தரம், 
  (2) அதன்  எடை,
  (3) அதன் அடக்க விலை மற்றும் ( FOB ) விலை,
  (4) அதனை பேக்கிங் செய்யும் முறை,
  (5) அதனை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு,
  (6) அதன் தற்போதைய சந்தை விலை நிலவரம்,
  (7) அதற்கான ஊக்கத்தொகை,
  (8) அதற்கான வரிச்சலுகை,
  (9) அதற்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ( EPC )
(10) அதனை ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை ஏதும் உள்ளதா ? என்பதைப்
       பற்றிய  விபரம். ( Banned or Restricted Status ) மற்றும் அதன் ( HS Code ). 
           
மீண்டும் அடுத்த பதிவில் வேறொரு தலைப்போடு,

நன்றியுடன் அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

34 comments:

Yasar Basha said...

aaha arumai arumai nanri nanbare-yasar

Unknown said...

நன்றி நண்பரே,

Anonymous said...

Super

Unknown said...

மிக்க நன்றி நண்பரே....
நான் 2மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பயிற்சியில் ரூ2000 செலுத்தி கலந்து கொண்டேன் அதில் கூட இதுபோல எளிய முறையில் விளக்கம் கிடைக்கவில்லை 2நாளாகதான் உங்கள் வலைதளம் பார்க்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருகிறது. உங்கள் பயிற்சியில் படிதவருக்கு மட்டும்தான் உதவுவீர்களா? இல்லை எங்களை போல் வேறுபக்கம் படித்து கைவிடபட்டவருக்கும் உதவுவீர்களா?...
உங்கள் பணி தொடர்க... வளர்க...
இறையருள் துணைபுரியுமாக...
வாழ்க வளமுடன்...

Unknown said...

நண்பரே, தங்களின் வருகைக்கு முதலில் நன்றி. உங்களைப் போல்தான் பலர் இங்கு ஏமாறுகிறார்கள். அவ்வாறு ஏமாற்றுபவர்களிடம் இருந்து ஏமாறாமல் இருக்க உதவும் ஒரு தளம்தான், நமது ஏற்றுமதி வழிகாட்டி வலைத்தளம். இங்கு உங்களது கேள்விகள், சந்தேகங்கள் எதுவாயினும் தாரளமாய் கேட்கலாம். எனவே, தயங்காமல் கேளுங்கள். நன்றி.

Turning Point Youth Welfare Foundation said...

நல்ல எண்ணம் மிக்க நன்றி ...ஒரு சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

Turning Point Youth Welfare Foundation said...

நல்ல எண்ணம் மிக்க நன்றி ...ஒரு சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

Suresh Loganathan said...

Nanbarukku mutharkan vanakkam!
Unkalai ponravargal ithuponru velipadaiyaga pakirthukondal ennaiponra palarin santhegangalum bayamum viraivil neengi naangalum vetri peruom enra nambikkaiyai uttukiradu.
Ungalin vazhikattuthalgal thodaara vazhthukkal! NANRI!!

ஆனந்த் சதாசிவம் said...

தேங்காய் ஏற்றுமதி செய்வது எப்படி?

Unknown said...

நண்பரே, தேங்காய் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் நீங்கள் இந்த இணையதளம் சென்று பாருங்கள். அதற்கான விபரங்கள் கிடைக்கும். www.coconutboard.nic.in/

kamal said...

Vanakkam Nanbare.Nanbare Malligai poo Export pannamudiyuma..........

Unknown said...

தாராளமாய் செய்யலாம் நண்பரே, மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்ய எந்த ஒரு தடையுமில்லை.

Anonymous said...

நண்பரே நெல்லி சாறு ஏற்றுமதிக்கு வாயிப்பு எப்படி உள்ளது? அது தொடர்பாக தெரிந்துகொள்வது எப்படி?

ringtones said...

அன்புள்ள நண்பருக்கு,

மூலிகை மருந்துகள் (சித்தா) ஏற்றுமதி செய்ய முடியுமா?

அன்புடன்
வெங்கட்
சங்ககிரி

yuvarajks said...

vanakkam nanbare.
banana mattrum onion yetrumathi vaaipugal kurithu arinthukolla thangalin uthavivendum.....

Unknown said...

Hi Karuppayya i am Ganesh .. i in ur FB Accunt as your friend ... am so much interest to do business especially am willing to do exports something t abroad but i ve no any basic idea and guidence to start this .. pls could you give some idea or suggestion how to start this nu.... my mob no +91 8144071776 and my Fb id "Kavin Ganesh T"

http://www.health-world-health.blogspot.com/ said...

வணக்கம் சார்,

இது ஒரு நல்ல வலைபதிவு வாழ்த்துக்கள்.எனக்கு இறக்குமதியாளர்களின் தேவையான பொருள் என்ன என்று அறிவது? மற்றும் இதற்கான இணையத்தளம் என்ன என்பதை தெரியபடுத்தவும்.

என்றும் அன்புடன்.

மைதீன்

haja8@hotmail.com

http://www.health-world-health.blogspot.com/ said...

வணக்கம் சார்,

இது ஒரு நல்ல வலைபதிவு வாழ்த்துக்கள்.எனக்கு இறக்குமதியாளர்களின் தேவையான பொருள் என்ன என்று அறிவது? மற்றும் இதற்கான இணையத்தளம் என்ன என்பதை தெரியபடுத்தவும்.

என்றும் அன்புடன்.

மைதீன்

haja8@hotmail.com

Mohamed Fahad said...

நன்றி நண்பரே,
இது ஒரு நல்ல வலைபதிவு வாழ்த்துக்கள்
நான் ஒரு ஊனமுற்ற இளைஞன்.
நான் ஏற்றுமதி தொழில் செய்து சாதிக்க விரும்புகிறேன்.

வீட்டிலிருந்தே இத்தொழில் செய்ய முடியுமா?

IE code பெற எவ்வளவு செலவு ஆகும்?

TIN நம்பரின் உபயோகம் என்ன?

அன்புடன்
Fahad

Unknown said...

மிக்க நன்றி

saravanan said...

எனக்கு இறக்குமதியாளர்களின் தேவையான பொருள் என்ன என்று அறிவது? மற்றும் இதற்கான இணையத்தளம் என்ன என்பதை தெரியபடுத்தவும்.

saravanan said...

Hi friends am new comer of export business
neam leaf possible to export?for that how much i want to invest for initial amount?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நண்பருக்கு வணக்கம்.. எனது பெயர் சாந்தகுமார்.. நான் காய்கறி ஏற்றுமதி செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன்..
வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்களை எவ்வாறு பெருவது என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. உங்களது வலைதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி...

Unknown said...

Vanakam pls guide me how can export the ladies Nightes

Unknown said...

சார் ..எனது கேள்வி வேரு நிருவனத்தின் பொருள்கலை அவர்கலது பெயர் மாற்றம் செய்யாமல். ஏற்றுமதி செய்யலாமா?
Example.. ponds பவுடரை நான் export செய்தால் தவரா?

Unknown said...

பொருட்களை எப்படி தெரிந்து கொள்ள,உள்ள அடிப்படை என்ன என தெரியப்படுத்தியது மிக்க பயனுள்ளது

Unknown said...

கீரை,கொத்தமல்லி செடி,ஏற்றுமதி செய்யலாமா......எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம்

Unknown said...

அண்ணன் அவர்களுக்கு வணக்கம்,

நான் சென்னையைய சேர்ந்தவன் எனக்கு உங்களின் ஆலோசனை தேவை அதை உங்களிடம் நான் கேட்க்க விருபுகிறேன்
நான் ஏற்றுமதி தொழில் செய்ய விரும்புகிறேன் எனக்கு இந்த தொழில் புதியது (ஓரளவு தெரியும் ) நான் இதனை என்னால சரியாக செய்ய முடியுமா ? இதற்கு பெரிய முதலீடு அவசியமா ? மற்றும் கண்டிப்பாக ஆங்கிலம் பேச தெரிந்து இருக்க வேண்டுமா ?

மே. ஸ்டாலின்
ஆர்.கே.நகர், சென்னை

Unknown said...

ஏற்றுமதி பற்றிய உங்களது விழிப்புணர்வு சேவை தொடர வாழ்த்துக்கள்.

Bala traders online markiting said...

PDF முறையில் தங்கள் பதிவுகலை டவன்லோடு செய்து
எனது பணியினை எளிமை ஆக்கிவிட்டிர்கள் உங்கள் பதிவு
பல அறியாமையை நீக்கியது மட்டும் அல்லாமல் தன்னம்மிக்கை ஏற்படுத்தியுள்ளது.

இறக்குமதியாளரை அறியும் வழிமுறைகள் தெரிய படுத்துங்கள்
நன்றி

senthilmalar said...

நாட்டுக்கோழி தமிழ்நாட்டில் விற்பனை செய்யனும்

Anonymous said...

வணக்கம் அண்ணா.நான் சாமை ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன்.இதனைப் பற்றி நான் தெரிந்து கொள்வது எப்படி?

G R SRINIVASAN AMBATTUR said...

very useful for understanding the actual facts in exporting business. thank you, G.R.Srinivasan, Ambattur