தமிழ் புத்தாண்டு - சிறப்பு பதிப்பு


நண்பர்கள் அனைவருக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிப்பு.


இறக்குமதியாலாரை கண்டுபிடிப்பது எப்படி ?

என்னிடம் பலர் கேட்கும் கேள்விகளில் அதிகப்படியானோரால் கேட்கப்பட்ட கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

இறக்குமதியாலரை கண்டுபிடிக்க பல வழிகள் இருக்கிறது. அவை அனைத்தையும் பற்றி வரும் பகுதிகளில் விரிவாக தருகிறேன்.

பலர் நினைக்கிறார்கள் ஏற்றுமதி என்றால் தாங்கள் ஏதோ ஒரு பத்து இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும், தம்மிடம் ஒரு இருபது முப்பது இறக்குமதியாளர் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் நல்ல ஒரு ஏற்றுமதியாளர் ஆக முடியும் என்று.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அப்படி இருந்தால்தான் நீங்கள் ஒரு ஏற்றுமதியாளர் ஆக முடியும் என்று எந்த வரைமுறையும் இல்லை.

காரணம்நீங்கள் ஒரு நாட்டிற்கு மட்டும் ஏற்றுமதி செய்தாலும் அது ஏற்றுமதிதான்பல நாடுகளுக்கு செய்தாலும் அதுவும் ஏற்றுமதிதான்.

உங்களுக்கு ஒரேயொரு இறக்குமதியாளர் அதுவும் நம்பிக்கையான ஒரு இறக்குமதியாளர் கிடைத்து விட்டாலே போதும் நீங்களும் ஒரு ஏற்றுமதியாலர்தான்.

உங்களின் சேவை மட்டும் அவருக்கு பிடித்து விட்டால் போதும் பிறகு உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் நோக்கமே உங்களை ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆக்குவதுதான்.

நீங்களும் ஒரு ஏற்றுமதியாளர் ஆனால் நிச்சயம் எனக்கும் அதில் மகிழ்ச்சியேஅதில் நமது தளத்தின் பங்கும் இருக்குமெனில் எனக்கு அது இன்னும் மகிழ்ச்சியே.

உங்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமாவது நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் பதிவுகள் உதவியாய் இருந்தாலே போதும் அதுவே நமது தளத்திற்கு கிடைத்த வெற்றிதான்.

தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிப்பு என்று சொல்லிவிட்டு உங்களுக்கு தேவையில்லாத எது எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். சரிபதிவுக்கு வருவோம்.

இறக்குமதியாலாரை கண்டுபிடிப்பது எப்படி ?

தமிழ் புத்தாண்டையொட்டி உங்களுக்கு நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தினாலான ஒரு சிறிய பரிசு.

இந்தியாவிலிருந்து வேளாண்  பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாலரின் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய நூறு பக்கங்கள் கொண்ட அறிய கையேடு.

இதில் இருக்கும் முகவரிகள் அனைத்தும் நமது இந்திய வேளாண் பொருள் ஏற்றுமதி மேம்பாடு கழகத்தில் இருந்து பெறப்பட்டவைகள் ஆகும்.

மேலும் இவர்கள் அனைவரும் கடந்த வருடங்களில் இந்தியாவிலிருந்து வேளாண் பொருட்களை இறக்குமதி செய்தவர்கள் ஆகும்.

எனவே வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைப்போர் தாராளமாய் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய விரும்புவோர் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.


நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நன்றியோடுஅன்பு நண்பன் - பி.சி.கருப்பையா


Download As PDF

11 comments:

Anonymous said...

மிகவும் சந்தோசம்...

சிவ குமார் said...

மிகவும் சந்தோசம்...

Anonymous said...

migavum nanri

Anonymous said...

மிக்க நன்றி நண்பரே...

Anonymous said...

மிக்க நன்றி நண்பரே...

AIRCEL INFOMATIX said...

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

நன்றி கருப்பையா அவர்களே

bhuvana srinivas said...

Thanks Nice to talking to u when will u post PDf information

Anonymous said...

I have more doubts on Registration of SSI. Can you clear it sir

ANTHUVAN RONALD said...

very good advice for exports

KARTHIKAISELVAN LAJAPATHY said...

VERY HELPFULL

barwin A said...

karuppatti export pannalama sir?enga pannalam?