நண்பர்களுக்கு வணக்கம் !
இந்த பகுதியில் வங்கியில் நடப்பு கணக்கு (Current Account) துவங்குவது எப்படி ?என்பது பற்றி பார்பபோம்.
ஏற்றுமதி உரிமத்திர்கான IE Code பெருவதற்கு வங்கி கணக்கு என்பது மிக மிக முக்கியமான ஒன்று.
அதற்கு இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏதேனும் ஒன்றில் உங்களது நிறுவனப் பெயரில் நடப்பு கணக்கு ஒன்று தொடங்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விவரங்கள் அறிய கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் (Nationalized Bank) :
நீங்கள் எந்த வங்கியில் நடப்புக் கணக்கு துவங்க நினைக்கிறீர்களோ முதலில் அந்த வங்கிக்கு நேரில் சென்று அந்த வங்கி அலுவலரிடம் அது குறித்த விபரங்களை கேட்டரிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில், நடப்பு கணக்கு துவங்க ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு நடைமுறையை கடைபிடிக்கிறார்கள்.
இங்கு உங்களுக்கு சில பொதுவான தகவல்களை மட்டும்தருகிறேன்.
ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உங்களது நிறுவன லெட்டர் ஹெட்டில் எந்த வங்கியில் நடப்புக் கணக்கு துவங்க நினைக்கிறீர்களோ, அந்த வங்கி அலுவலருக்கு நடப்புகணக்கு துவங்கித் தர வேண்டி எழுதி கொள்ளுங்கள்.
அதில் உங்களது நிறுவனத்தின் பெயரில் ஏற்கனவே தயாரிக்கப் பட்டுள்ள ரப்பர் ஸ்டாம்பான ஃபார் சீல் ரௌன்ட் சீலினால் சீல் வைத்துக் கொள்ளுங்கள்.
ஃபார் சீல் வைத்திருக்கும் இடத்தில் உங்கள் கையெழுத்திட்டு தகுந்த சான்றிதழ்களுடன் வங்கியில் சமர்ப்பியுங்கள்.
ஒரு சில வங்கிகளில் டின் நம்பர் கேட்பார்கள். இன்னும் ஒரு சில வங்கிகளில் SSI Part-1 அல்லது SSI Part-2 அல்லது இரண்டும் கேட்பார்கள்.
பொதுவாக வங்கியில் நடப்பு கணக்கு துவங்க தேவைப்படும் ஆவணங்கள் :
1.அடையாள அட்டை,
2.குடும்ப அட்டை,
3.உங்கள் நிறுவனத்தின் லெட்டர் ஹெட்,
4.உங்கள் நிறுவனத்தின் ரப்பர் ஸ்டாம்ப் சீல்கள்,
5.பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ இரண்டு,
6.SSI Part-1,
உங்களை வங்கியில் அறிமுகப் படுத்த அந்த வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர்.
உங்களுக்கு ஏற்கனவே அந்த வங்கியில் கணக்கு இருக்கும் பட்சத்தில் உங்களை அறிமுகப் படுத்த வேறு எவரும் தேவையில்லை.
மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள வங்கி கிளைகளை அனுகவும்.
முடிந்த வரை தங்களுக்கு நன்கு பரிச்சயமான வங்கியிலேயே கணக்கு துவங்குங்கள். ஏனெனில், ஏற்றுமதி துறையில் வங்கியின் துணை என்பது மிக மிக அவசியமான ஒன்று.
சரி நண்பர்களே, அடுத்த பதிவினில் மிக முக்கியமான ANF2A Form என்றழைக்கப் படும் IE Code-க்கான விண்ணப்ப படிவத்தை எப்படி பெறுவது? என்பது பற்றி பார்ப்போம்.
உதவிக்கு தொடர்பு கொள்ளவும்,
அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா
19 comments:
சார் ரொம்ப பயனுள்ளதா இருக்கு நன்றி
தங்கள் கருத்துரைக்கு, மிக்க நன்றி தோழியே...
The information provided by you is very useful
மிக்க நன்றி. அன்பு நண்பன் sakthi shenbagaraj
SUPER KARUPPAIAH !
Your blog is very useful to export Beginners.
A.George Stephen.
Your blog is very useful to export Beginners.
மிக்க நன்றி. அன்பு நண்பன் தங்கள் கருத்துரைக்கு,A.RATHNA KUMAR.MAILL :arkkumar23@gmail.com
Nanbare vanakkam...
ssi il pathivu peruvatharku 6 month agum enru koorineergaley...appadi enral nam vangiyil kanakku thuvanguvatharku 6 month kathirukka venduma....
அப்படி என்று ஏதுமில்லை நண்பரே, நீங்கள் SSI-ல் பதிவு செய்த மறுநாளே கூட வங்கியில் நடப்புக் கணக்கு துவங்கிக் கொள்ளலாம்.
To open a current account the introduction is not required from December 2012 as per RBI notification.
நான் ஏற்றுமதி தொழில் செய்ய விரும்புகிறேன். நான் கோவையில் வசித்து வருகிறேன்.ஏற்றுமதி தொழில் செய்ய நடப்பு கணக்கு துவங்க எந்த வங்கி சிறந்தது. அதன் கிளை கோவையில் உள்ளதா என்பதை தங்கள் பதிவுகளில் தெரிவித்தால் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் ஏற்றுமதியில் வங்கியின் பங்கு மிகவும் முக்கியம் என தாங்கள் தெரிவித்துள்ளீர்கள்.

எந்த வங்கிக்குப் போனாலும் நடப்புக் கணக்கு துவங்க TIN - நம்பர் கேட்கிறார்களே. TIN நம்பர் கண்டிப்பாக எடுக்க வேண்டுமா? எனில் எங்கே எடுப்பது? எவ்வளவு செலவாகும்? தயவு செய்து உதவுங்கள்.
dear friend, naan ssi application ackmoledement pettru vitean canara bank il sb a/c ullathu angea current a/c open seialaama
nan enathu peril iec vanka ninikiren vankamutiyumaa
உங்களுக்கு நடப்பு கணக்கு துவங்க வேண்டுமெனில்
இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் --8870500128
சென்னை
If you needCurrent account Please contact mobile :-Mr.Alagiri,Mr.Sivakumar
(9940460287) or 044-45145965
Only in Chennai
Post a Comment