ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ( EPC)


நண்பர்களுக்கு வணக்கம்

பதிவுக்குள் போகும் முன் கொஞ்சம் பேசலாமே ?

"IE Code எடுத்து விட்டேன். ஆனால், பிறகு என்ன செய்வதென்றே  தெரியவில்லை" பல நண்பர்கள் இப்படி புலம்புவதை நீங்கள் கூட பார்த்திருக்கலாம்.

ஒருவர் IE Code எடுப்பது என்பது ஒன்றும் அவ்வளவு ஒரு பெரிய கடினமான காரியமில்ல. 250 ரூபாய் பணம் கட்டினால் எவரும் IE Code எடுத்து விடலாம். ஆனால், அதற்கு பிறகு ? அதுதான் கேள்வி. எந்த ஒரு ஏற்றுமதியாழரின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப் படுவது இங்குதான்.

எனவே, நீரில் இறங்கும் முன் நீந்த கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீந்த கற்றுக் கொடுப்பது வேண்டுமானால் யாராயினும் இருக்கலாம், ஆனால் நீந்தப் போவது என்னமோ நீங்கள்தான். கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி நீந்தக் கற்றுக் கொடுக்கும், ஒரு சின்ன வேலையைத்தான் நமது ஏற்றுமதி வழிகாட்டி இணையதளம் செய்து வருகிறது. இந்த தளத்தின் பதிவுகள் ஒரே  ஒருவருக்கு மட்டுமே உதவினாலும் கூட, அதுவே நமது தளத்துக்கு கிடைத்த வெற்றிதான். 
 
சரி நண்பர்களே,  இந்த பதிவில் EPC எனும் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (Export Promotion Council) என்றால் என்ன? என்பது பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.

அதற்கு முன், IE Code பெறுவது எப்படி? என்பது பற்றி படிக்காதவர்கள் கீழிருக்கும் லிங்கை க்ளிக் செய்து படித்துக் கொள்ளவும்.

IE Code பெறுவது எப்படி?

மேலும் தொடர, எந்தப் பொருளை ஏற்றுமதி செய்யப் போகிறோம்? என்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டு தொடருங்கள் ஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி ? என்பது பற்றி தெரியாதவர்கள் கீழிருக்கும் லிங்கை க்ளிக் செய்து படித்துக் கொள்ளவும்.

ஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி ? 




ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (Export Promotion Council)


இது நமது இந்திய அரசால் நமது ஏற்றுமதியாளர்களின் நலன் கருதி உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பாகும், இவைகள் ஒவ்வொறு வகையான பொருளுக்கும் தனித் தனி ஏற்றுமதி மேம்பாட்டு கழகம்  என மொத்தம் 33 வகையான ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள்   உள்ளன. 

இவை ஒவ்வொன்றுக்குமான தலைமை அலுவலகங்கள் குறிப்பிட்ட சில மாநில தலை நகரங்களிலும், அதன் கிளை அலுவலங்கள் மற்ற  ஏனைய இடங்களிலும் இருக்கின்றன. 

அவற்றின் முகவரிகளை வரும் பகுதிகளில் தருகிறேன். அதற்கு முன் இவற்றின் பயன்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். 

# நீங்கள் தேர்வு செய்துள்ள பொருளைப்பற்றிய மேலதிக விபரங்கள்.

# அந்தப் பொருட்களை எந்தெந்த முறையில் மதிப்புக் கூட்டி ( Value Added )
ஏற்றுமதி செய்யலாம் என்ற விபரங்கள். 

# அந்த பொருட்களுக்கான பொதுவான கட்டுதல் (Packing) முறைகள்
போன்ற   விபரங்கள்.

# அவை உணவுப்பொருட்கள் எனில், அவற்றை எங்கு     பரிசோதித்து, அதற்கான (Inspection Certificate) சான்றிதழைப் பெற வேண்டும் போன்ற விபரங்கள்.

# அந்த பொருளுக்கான வரிசலுகை (Duty Drawback) எத்தனை சதவீதம் போன்ற விபரங்கள்.

# அந்த பொருளுக்கான ஊக்கத்தொகை  (Incentive) எத்தனை சதவீதம் போன்ற விபரங்கள்.

# அந்த பொருளின் தற்போதைய சந்தை விலை (Market Rate) நிலவரம் எவ்வளவு? போன்ற விபரங்கள். 

# அந்த பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு (Importing Countries) போன்ற விபரங்கள்.

# அந்த பொருட்களை அதிகம் வாங்கும் இறக்குமதியாளரின் முகவரி (Buyers Address) போன்ற விபரங்கள்.

என, இன்னும் பல உதவிகளை இந்த ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் நமக்கு செய்கின்றன. 

இவைகளை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்வது? 

அதற்கு, நீங்கள் அந்தந்த பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களில் RCMC (Registration Cum Mempership Certificate) என்று சொல்லப் படக்கூடிய பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் சான்றிதழ்  பெற  வேண்டியது மிக அவசியம்.

ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களில் உறுப்பினர் ஆவது எப்படி?

முதலில் நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்துள்ள பொருளுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் எது எனக் கண்டறிந்து, அவர்களின் இணையதள முகவரிக்கு சென்று அதற்கான அப்ளிகேஷன் பார்மை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 
  
தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன் பார்மை பூர்த்தி செய்து, அதற்கான கட்டணத் தொகையை  அவர்களால் குறிப்பிடப் பட்டிருக்கும் பெயரில் Demand Draft - ஆக  எடுத்து கொள்ளுங்கள். 

இந்த கட்டணத் தொகையானது ஒவ்வொரு   ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்திற்கும் வேறுபடும்.
     
பிறகு,பூர்த்தி செய்யப்பட்ட அப்ளிகேஷன் பார்முடன் அவர்கள் கேட்டிருக்கும் ஆவணங்கள் மற்றும் Demand Draft - யையும் இணைத்து அவர்களின் அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். 

மேலதிக விபரங்களுக்கு, அந்தந்தப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா


Download As PDF

11 comments:

Anonymous said...

Deivame neenga engeyo poitinga -yasar

Unknown said...

நல்ல பதிவு அந்த பேகிங் சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் பயனாக இருக்கும்

Unknown said...

வருகைக்கு நன்றி நண்பரே,
நிச்சயம் வரும் பகுதிகளில் பேக்கிங் சம்பந்தமான விபரங்களை தருகிறேன்.

Anonymous said...

புதிய நம்பிக்கை பிறக்கிறது. உங்களின் இந்த வழிகாட்டி . நன்றி

Anonymous said...

புதிய நம்பிக்கை பிறக்கிறது. உங்களின் இந்த வழிகாட்டி . நன்றி

Unknown said...

நன்றி நண்பரே,

Sankar said...

We can get membership through online application also, no need to take did,direct payment from credit or debit card

Sankar said...

We can get membership through online application also, no need to take did,direct payment from credit or debit card

suresh said...

i just want to know about drawback

jaynanis said...

Sir, இரண்டு பேர் சேர்ந்து partnership-ல Exports&Imports Business பண்ணும்போது Proprietor-னு வரும் இடங்களில் எல்லாம் எந்த வார்த்தை வரும்? கையெழுத்து போடும் இடங்களில் இருவருமே பங்குகொல்வோமா? சீல் தயார்செய்வதிலும் மாற்றம் வருமா? எனது சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள்.

Unknown said...

பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறீர்கள்.மிக்க நன்றி நண்பரே...