மருந்து ஏற்றுமதி 17% அதிகரிக்கும்


நடப்பு 2012–13–ஆம் நிதி ஆண்டில், இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 17 சதவீதம் அதிகரித்து 1,550 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011–12–ஆம் நிதி ஆண்டில் இந்த ஏற்றுமதி 1,322 கோடி டாலராக இருந்தது.
கடந்த நிதி ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரித்து 30,370 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. மொத்த ஏற்றுமதியில் மருந்து துறையின் பங்கு 4.4 சதவீதமாக உள்ளது.
வரும் 2013–14–ஆம் நடப்பு நிதி ஆண்டில் 2,500 கோடி டாலர் மதிப்பிற்கு மருந்து ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு 55 சதவீதமாக உள்ளது. இந்நாடுகளின் பொருளாதாரம் தற்போது மிகவும் மந்தமாக உள்ளது. 
எனவே, ஏற்றுமதி இலக்கை எட்டுவது கடினம் என வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக மருந்து உற்பத்தியில் அளவின் அடிப்படையில் நம் நாடு மூன்றாவது இடத்திலும், மதிப்பின் அடிப்படையில் 13–வது இடத்திலும் உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மருந்து துறையின் வர்த்தகம் ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினத்தந்தி ஜனவரி 26, 2013
Download As PDF

0 comments: