வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை : அரசு கைவிரிப்பு


வெங்காயத்திற்கு மீண்டும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் இல்லை என, மத்திய வர்த்தகத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. 
நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில், 40 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் மகாராஷ்டிராவில், போதுமான மழை இல்லதாததால், அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 
இதனால், வெங்காய வரத்து குறைந்து, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.


ஒரு வாரத்திற்கு முன்பு, சில்லரை விற்பனையில், கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், தற்போது 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. 
இதையடுத்து, வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. 
இது தொடர்பாக வர்த்தகம், வேளாண் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இக்கூட்டத்தில், மீண்டும் வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயிப்பதன் மூலம், உள்நாட்டில் அதன் விலை குறையும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த அறிவிப்பு, நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 
இந்நிலையில், மீண்டும் வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் செய்வதற்கு, மத்திய வேளாண் அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதியில், கரீப் பருவ சாகுபடி வெங்காயம் சந்தைக்கு வரும் என்பதால், வெங்காயம் விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் அது தெரிவித்துள்ளது.
எனவே, வெங்காயத்திற்கு மீண்டும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. 
ஆனால் சந்தையில் அதன் வரத்து மற்றும் விலை நிலவரம் குறித்து கூர்ந்து கனிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்ற 2011-12ம் சந்தை பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் வெங்காய உற்பத்தி, 1.51 கோடி டன்னாக இருந்தது.

இது,நடப்பு நிதியாண்டில் 20 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு, வெங்காய விலை ஏற்றம் காரணமாக, அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. 
பின்னர் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பின்னர், இத்திட்டமும் ரத்து செய்யப்பட்டு, தாராள வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - யாஹூ, பிப்ரவரி 5, 2013

Download As PDF

2 comments:

Ra.THANGAVEL said...

நண்பா வணக்கம் ;EPC(FIEO) இதில் Associate member category, and ordinary member category என இரண்டு வகை உள்ளது இதில் எந்த வகையில் MEMBER ஆகா வேண்டும் , அதன் பயன் என்ன ?

siva said...

Dear sir,

we proposed to start a export business in this regarding we found more information in webblogger and we would like to meet you for collecting more information about export so kindly consider our obligation and call this no 9443321060