நண்பர்களுக்கு வணக்கம் !
ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது எப்படி ?
இந்த கேள்விக்கு உங்களுக்கு விடை தெரிய வேண்டுமாயின் முதலில் சர்வதேச வர்த்தக விதிமுறைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
ஏற்றுமதி துறையைப் பொறுத்தவரையில் விலை நிர்ணயம் என்பது மிகமிக முக்கியம். காரணம் ஏற்கனவே சொல்லியது போல் ஏற்றுமதி துறை ஒன்றும் அவ்வளவு எளிதான துறை அல்ல.
இருந்தும் நம்மில் பெரும்பாலானோர் ஏற்றுமதி துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முதல் கராணம் இதில் லாபம் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணம்தான்.
இதில் நமக்கு மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது.
"யார் ஒருவர் எந்த ஒரு செயலையும் லாபம் ஒன்றையோ குறிக்கோளாகக் கொண்டு துவங்குகுகிறாரோ இறுதியில் நிச்சயம் அது தோல்வியில்தான் முடியும்" இதை நான் சொல்லவில்லை -
இன்று இணைய உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் Facebook-ஐ உருவாக்கிய மார்க் ஜுக்கெர்பெர்க் சொன்னது.
ஆம்! எந்த ஒரு செயலையும் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு துவங்காமல் முதலில் அவற்றை கற்றுக்கொள்ள நினையுங்கள்.
வெற்றி நிச்சயம் !
"கற்க கற்க நமக்கு
கடல் கூட சிறு துளிதான்...!"
Incoterms - International Commercial Terms
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இயங்கி வரும் ICC எனப்படும் International Chamber of Commerce - ஆல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் உலகளாவிய விலை நிர்ணய முறையைக் கொண்டு வர முயற்சித்ததன் பலன்தான் இந்த Incoterms எனப்படும் சர்வதேச வர்த்தக விதிமுறை கொள்கை.
இவை மொத்தம் பதிமூன்று வகைப்படும், அவைகள் :
Download As PDF