நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதத்தில் 42% உயர்ந்து ரூ.572 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி ரூ.403 கோடியாக இருந்தது.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் அதிகமாக கைவினைப் பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.மொத்த கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே 60 சதவீதம் செல்கின்றன.
கடந்த நவம்பர் மாதத்தில் போர்வைகள், ஓவியங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி 124 சதவீதமும், மரச் சிற்பங்கள் ஏற்றுமதி 91 சதவீதமும், அலங்கார நகைகள் ஏற்றுமதி 85 சதவீதமும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.14,850 கோடியாக இருந்த ஏற்றுமதி, இந்த ஆண்டு ரூ.17,280 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி ௦- www.hepcindia.com/
0 comments:
Post a Comment