பருப்பு ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு


மத்திய அரசு பருப்பு ஏற்றுமதி தடையை மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்துள்ளது. அதேசமயம் சிலவகை பருப்புகள் ஏற்றுமதிக்கு மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இவற்றிற்கான உச்சவரம்பு 10,000 டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில், பருப்பு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

அதேசமயம் தேவையை விட உற்பத்தி குறைவாக உள்ளதால் தேவையை ஈடுசெய்ய 30 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டு தேவைப்பாட்டைக் கருதி கடந்த 2006–ஆம் ஆண்டில் முதற்கட்டமாக ஆறு மாதங்களுக்கு பருப்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. 

இது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு இறுதியாக 2013 மார்ச் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இது தற்போது 2014 மார்ச் 31–ந் தேதி வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Download As PDF

0 comments: