ஏற்றுமதியில் தடைகளும் அதன் வகைகளும்


நண்பர்களுக்கு வணக்கம் !

ஏற்றுமதி தொழிலில் ஈடுபட நினைக்கும் நபர்களில் பெரும்பாலானோரின் மனதில் ஏற்படும் பொதுவான கேள்விகளுள் இதுவும் ஒன்று. 

"எந்த பொருளை ஏற்றுமதி செய்வது ?"

இவைப்பற்றி ஏற்கனவே ஏற்றுமதி செய்வதற்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற பதிவில் விபரமாக தந்திருக்கிறேன்.

இருந்தும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இந்த பதிவு.

ஏற்றுமதி செய்வதற்கான பொருளை தேர்ந்தெடுக்கும் முன், ஏற்றுமதி செய்ய என்னென்ன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற விபரங்கள் கிடைத்தால் இன்னும் நன்றாயிருக்கும் அல்லவா ?

அவைபற்றிய பதிவுதான் இது. சரி, வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.

பொதுவாக எந்த ஒரு நாடும் அந்த நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காரணம், உள்நாட்டு தேவை. 

எந்த ஒரு பொருளாயினும் அது அந்நாட்டின் தேவையான கையிருப்பை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும்.

அதவாது உற்பத்தி அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.

காரணம், உற்பத்தியாகும் பொருட்களின் அளவு குறைவாக இருக்கும் நிலையில் அந்த பொருளை ஏற்றுமதிக்கு அனுமதித்தால் அதன் உள்நாட்டின் விலை கணிசமாக உயர்த்து மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்படும்.

உதாரணத்திற்கு அரிசியை எடுத்துக்கொள்வோம். இந்திய அரசு அடிக்கடி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பொருட்களில் இதுவும் ஓன்று.

அரசு ஒன்றும் அரிசி ஏற்றுமதியாளர்கள் மேல் கோபம் கொண்டு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வில்லை..

காரணம், மேற்சொன்ன உள்நாட்டு தேவை.

அரிசி உற்பத்தி உள்நாட்டிலேயே குறைவாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுமதிக்கு அனுமதித்தால் உள்நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும்.

இதன் காரணமாய் உள்நாட்டில் அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்து பொது மக்கள் பாதிக்கப்படுவர்.

எனவேதான் எந்த ஒரு பொருளாயினும் அதன் உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப் படுகிறது.

மாறாக அதன் உற்பத்தி அதிகமாக இருந்து, அதன் கையிருப்பு அளவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த பொருளை ஏற்றுமதி செய்ய அரசு எந்த ஒரு தடையும் விதிப்பதில்லை.

அவ்வாறான சமயத்தில் அந்த குறிப்பிட்ட ஒரு பொருளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதால் உள்நாட்டில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

எனவேதான் நாட்டு மக்களின் நலம் கருதி அரசு அந்த பொருளின் தற்போதைய உற்பத்தி நிலை மற்றும் எதிர்கால தேவை நிலை அறிந்து அந்த பொருளை தடை செய்யவோ, தடைய நீட்டித்தோ அல்லது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தோ அறிவிக்கிறது. 

சரி, ஏற்றுமதிக்கு அனுமதித்துள்ள பொருட்களை எந்தெந்த முறையில் தடை விதிக்கிறார்கள் என்பதைப்பற்றி பார்ப்போம்.

ஏற்றுமதியில் பொருட்களின் தடைகளும் அதன் வகைகளும் :
  1. Free Items,
  2. Restricted Items,
  3. Prohibited Items.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் எந்த ஒரு பொருளையும் மேற்கண்ட மூன்று முறைகளில்தான் வகை பிரிப்பார்கள்.

(1) Free Items :

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பொருள் இந்த வகையின் கீழ்வரும் பட்சத்தில் அந்த பொருளை ஏற்றுமதி செய்யவோ, இறக்குமதி செய்யவோ எந்த ஒரு தடையுமில்லை. தாராளமாய் அதையே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


(2) Restricted Items :

இந்த பிரிவின் கீழ்வரும் பொருட்களுக்கு ஏற்றுமதி செய்ய குறிப்பிட அளவு என ஒரு அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

உதாரணத்திற்கு பருப்பு வகை பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிவெடுத்து உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அந்த பொருளை ஏற்றுமதி செய்யலாம். ஆனால், அரசு குறிப்பிட்டுள்ள அளவுதான் ஏற்றுமதி செய்ய முடியும். அதற்கு மேல் ஏற்றுமதி செய்யமுடியாது.


(3) Prohibited Items :

இந்த பிரிவின் கீழ்வரும் எந்த ஒரு பொருளையும் நீங்கள் ஏற்றுமதியோ, இறக்குமதியோ எதுவாயினும் செய்யமுடியாது.

காரணம், இந்த பிரிவின் கீழ்வரும் அனைத்துப் பொருட்களும் ஏற்றுமதி  செய்யவோ, இறக்குமதி செய்யவோ முற்றிலும் தடைவிதிக்கப்பட்ட பொருட்களாகும்.

இருந்தும் நீங்கள் இவ்வாறான தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யவோ, இறக்குமதி செய்யவோ விரும்புகிறீர்கள் எனில் இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அலுவலகத்தின் (Joint Director General of Foreign Trade) அனுமதி பெற்று செய்யலாம்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்கள்  அடங்கிய தொகுப்பை மின் புத்தகமாக தந்திருக்கிறேன். 

வேண்டுவோர் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளவும்.



மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.

நன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

8 comments:

kavitha said...

தகவலுக்கு நன்றி...

Karthikeyan said...

உங்கள் தகவலுக்கு மிக மிக மிக நன்றி !!!!!!!!

Karthikeyan said...

திருப்பூரில் நீங்கள் வகுப்பு எடுப்பதாக அறிவித்திர்கள் ஆனால் எப்போது எங்கு??????

Unknown said...

you are a good guide and grate man in exporters& importers

Anonymous said...

மிக்க நன்றி நண்பரே! நான் rexin school bags foam school bags போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றேன். நான் இதனை ஏற்று மதி செய்ய முடியுமா? இதற்க்கு ஏதானும் தடை உள்ளதா? நண்பரே சொல்லுங்களேன். ப்ளீஸ்

Unknown said...

REALLY YOU ARE GREAT FRIEND

Bugsbuy said...

dear sir. ஏற்றுமதியில் 1 டன் அரிசி ஆடரை பெற்றுவிட்டோம். 1 டன் அரிசியை வங்கிங்கியும் விட்டோம். அடுத்து என்ன செய்வது.

POORNIMA.R said...

Thozarukku yenathu panivana vanakkangalum nandrikalum ungal pani thodara yen valthukkal.naan neraya class ku poi neraya panam selavu seithullen aanal ungal vilakkankal abaram.megavum nendraka erunthathu nandri.manamaara vazthukiren