அமெரிக்காவுக்கு 500 டன் மாம்பழம் ஏற்றுமதி


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மாம்பழத்தின் அளவு இந்த ஆண்டில் சாதனை அளவை எட்டும் என கணிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, இதுவரை இல்லாத சாதனை அளவாக 500 டன்கள் வரை மாம்பழங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாக உள்ளதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மாம்பழத்துக்கு அதிகரித்துள்ள தேவை, மற்றும் ஏற்றுமதி தரத்திலான மாம்பழங்களின் விளைச்சல் போன்றவை காரணமாக அதிக ஏற்றுமதி சாத்தியம் என்று  APEDA வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 209 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியானது.

இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் வார நிலவரப்படி, 90 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. 

அல்ஃபோன்சா மற்றும் கேசர் ரக மாம்பழங்கள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மாம்பழத்தின் அளவு இந்த ஆண்டில் சாதனை அளவை எட்டும் என கணிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, இதுவரை இல்லாத சாதனை அளவாக 500 டன்கள் வரை மாம்பழங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாக உள்ளதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மாம்பழத்துக்கு அதிகரித்துள்ள தேவை, மற்றும் ஏற்றுமதி தரத்திலான மாம்பழங்களின் விளைச்சல் போன்றவை காரணமாக அதிக ஏற்றுமதி சாத்தியம் என்று ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 209 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியானது.

இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் வார நிலவரப்படி, 90 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. அல்ஃபோன்சா மற்றும் கேசர் ரக மாம்பழங்கள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன.

நன்றி, புதிய தலைமுறை - மே 13,2013

Download As PDF

1 comments:

kavitha said...

தகவலுக்கு நன்றி