இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் - FIEO

நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் FIEO (Federation of Indian Export Organization) என்று அழைக்கப்படும் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் பற்றியும், அதன் நடைமுறைகள் மற்றும் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.


 அதற்கு முன்னர் உங்களிடம் சின்னதாய் ஒரு பகிர்வு.

இங்கு “ஏற்றுமதி இறக்குமதி உரிமம் எண் (IE Code) பெரும் அனைவரும் ஏற்றுமதியில் ஈடுபடுகிறார்களா...? என்று கேட்டால் “இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

1997-ஆம் ஆண்டுக்கு முன் வரை நாம் IE Code பெறுவதாயின் மத்திய ரிசர்வ் வங்கியிடம்தான் (Reserve Bank of India) விண்ணப்பிக்க வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் இன்று அந்த வேலையை DGFT (Director General of Foriegn Trade) என்று அழைக்கப்படும் இந்திய வெளிநாட்டு வர்த்தகத்துறை அலுவலகம் செய்து வருகிறது.

ஆரம்பத்தில் IE Code பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 1,000 ரூபாயாக இருந்தது. எவரும் IE Code பெற விண்ணப்பிக்க வில்லை.

‘ஒருவேளை விண்ணப்பக் கட்டணம் அதிகமாக இருப்பதால்தான் அதிகப்படியானோரால் IE Code பெற முடியவில்லையோ என்று யோசித்த இந்திய அரசு 1,000 ரூபாய் கட்டணத்தை 500 ரூபாயாக குறைத்தது.

அப்போதும் எதிர்பார்த்த அளவிற்கு IE Code பெற யாரும் விண்ணப்பிக்க வில்லை.

மீண்டும் யோசித்த அரசு ‘500 ரூபாய் கட்டணம் என்பது கூட அதிகமாக இருக்குமோ என்றெண்ணி அதையும் வெறும் 250 ரூபாயாக குறைத்தது.

ஆனால் அப்போதும் எதிர்பார்த்த அளவு ஏற்றுமதியாளர்கள் உருவாகவில்லை.

காரணம் புரியாத அரசு, கலத்தில் இறங்கி ஆராய்ந்த பின்தான் தெரிந்தது ‘நாம் விண்ணப்பக் கட்டணத்தை குறைத்ததை விட, ஏற்றுமதி துறையில் உள்ள நடைமுறைகளை முதலில் எளிமைப்படுத்த வேண்டியிருக்க வேண்டுமென்று.

விழித்துக் கொண்ட அரசு முதல் வேலையாக ஏற்றுமதி துறையில் உள்ள அனைத்து நடைமுறைகளையும் மிகவும் எளிமைப்படுத்தி திருத்தி அமைத்தது.

ஆனால் அவ்வளவு எளிமைப்படுத்திய பின்பும்கூட ஏற்றுமதி துறையில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை என்னவோ தற்போது வரை மிகக்குறைவுதான்.

காரணம், ஒன்றே ஒன்றுதான் வழி தெரியாமை.

இங்கு நம்மில் பலர் அதற்கான வழி தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நன்குணர்ந்த ஒருசில கொள்ளைக்கார கூட்டங்கள் இன்று ‘ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் என்கிற பெயரில் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நண்பரின் நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

தான் ‘ஏற்கனவே IE Code பெற்றுவிட்டதாகவும் அடுத்த படியாக என்ன செய்ய வேண்டும்? என்றும் கேட்டார்.

நானும் அதற்கான வழிமுறைகளை கூறிவிட்டு “ஆமாம் IE Code பெற எவ்வளவு செலவு செய்தீர்கள்?”  என்று கேட்டேன்.

அவர் சொன்ன பதில் கேட்டு எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

அவர் சொன்ன பதில் இதுதான்,

IE Code பெற மட்டுமே நான் 12,000 ரூபாய் செலவு செய்தேன்.

மேலும் அவரே தொடர்ந்தார், தனக்கு ஏற்றுமதி பற்றி எதுவுமே தெரியாததால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு ஏற்றுமதி பயிற்சி நிறுவனத்தின் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதாகவும், அவர்களே IE Code பெற்றுத் தந்ததாகவும் கூறினார்.

மேலும் பயிற்சி கட்டணம் என்கிற பெயரில் சில ஆயிரங்களையும், IE Code பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் என்கிற பெயரில் 12,000 ரூபாயும் வாங்கிக்கொண்டு தனக்கு IE Code பெற்றுத்தந்ததாகக் கூறினார்.

அதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் அவரிடம் ஒரேயொரு கேள்வி மட்டும் கேட்டேன். “IE Code பெற அரசு நிர்ணயித்துள்ள விண்ணப்பக் கட்டணம் உங்களுக்கு எவ்வளவு என்று தெரியுமா?என்று.

அவர் சொன்னார் “அது தெரியாமல்தானே நான் அவர்களை தொடர்பு கொண்டேன், அதற்கான வழிமுறைகள் தெரிந்திருந்தால் நான் ஏன் அவர்களை தொடர்பு கொள்ளப் போகிறேன்? என்றவர் ,

“எனக்கு ஒரு சந்தேகம் என்றார்.

“என்ன?என்றேன்.

எனது நண்பன் ஒருவன் என்னிடம் ‘IE Code பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நன்றாக யாரிடமோ நீ 12,000 ரூபாயை ஏமாந்திருக்கிராய் என்கிறான். அதுதான் எனக்கும் சந்தேகம், நீங்களே சொல்லுங்கள் அதற்கான உண்மையான விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? என்றார்.

நான் சொன்ன பதிலைக்கேட்ட அவர் தலைசுற்றி கீழே விழுகாததுதான் மிச்சம்.

“பின்னர் வெறும் 250 ரூபாய் மட்டுமே செலுத்தி பெற வேண்டிய IE Code-ஐ 12,ooo ரூபாய் செலவு செய்து பெற்றால் தலைசுற்றமால் என்ன செய்யுமாம்?

ஆம், IE Code பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ள தொகை வெறும் 250 ரூபாய் மட்டுமே.

ஏமாற்றப்பற்றோரில் ஒருத்தரைத்தான் இப்போது உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இதைப்போல் இன்னும் இங்கு எத்தனையோ பேர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சின்ன ஒரு திருத்தம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்பதே சரியாக இருக்கும்.

இங்கு உள்ள எல்லோரையுமே என் ஒருவனால் ஏமாற்ற முடியும் என்று யாரேனும் ஒருவர் சொன்னால் நிச்சயம் அது முடியாத காரியமாகத்தான் இருக்கும்.

ஏனெனில் இங்கு எல்லோருமே ஏமாளிகள் அல்ல.

மேலும் இங்கு மட்டும் என்றல்ல உலகில் எங்குமே ஏமாளிதான் ஏமாற்றப்படுகிறான்.

ஏமாற்றுபவர்களை உங்களால் எதிர்த்து கேள்வி கேட்கத்தான் முடியவில்லை. அவர்களிடம் ஏமாறரமலாவது இருங்களேன்.

ஏற்றுமதி துறையில் அதிகப்படியானோர் ஈடுபட வேண்டும் என்று நினைக்கும் ஒரு அரசு, ஏற்றுமதி துறைக்குள் நுழையும் முன்னரே இங்கு எத்தனை பேர் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏன் கவனிக்கத் தவறுகிறது?

இப்படியே போய்க்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் இங்கு ஏற்றுமதியாளர்களை விட ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் என்ற பெயரில் ஏமாற்றிப் பிழைக்கும் கொள்ளைக்கார கூட்டத்தினர்தான் அதிகமாயிருப்பார்கள்.

இதைத்தான் விரும்புகிறதா நமது இந்திய அரசு...?

சாதாரண ஒரு டுட்டோரியல் கல்லூரி ஆரம்பிப்பதற்கே ஆயிரம் நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் இந்த கால கட்டத்தில் ஒரு ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு நடைமுறை சாத்தியங்களும் வரையறுக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியதே.

ஏற்றுமதி பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலே போதும் நீங்கள், நான் என யார் வேண்டுமானாலும் இங்கு ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கலாம்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஏற்றுமதி செய்து சம்பாதிப்பதைவிட ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் ஆரம்பித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது அப்பட்டமான உண்மை.

ஆம், ஒரு வருடம் நீங்கள் ஏற்றுமதி தொழிலில் சம்பாதிக்கும் பணத்தைவிட ஒரேயொரு ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் அதிகமாக சம்பாதிக்கலாம்.

எனவேதான் அதை பலரும் இங்கு தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்களை சரியாக வரைமுறைப்படுத்தி அதன்படி அவற்றை சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படும் வரைக்கும் இங்கு ஏமாறுபர்களை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

சரி பதிவுக்கு வருவோம்.

FIEO (Federation of Indian Export Organization)

இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகமான FIEO டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு அமைப்பாகும்.

மேலும் இது ஏற்றுமதியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இயங்கி ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.

இவற்றின் முக்கியமான பயன் என்னவெனில் ஒரு ஏற்றுமதியாளர் குறிப்பிட்ட ஒருசில பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்வதாயின் அந்த பொருளுக்கான குறிப்பிட்ட ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களில் (EPC) உறுப்பினர் (RCMC) ஆனாலே போதும்.

இவைபற்றி ஏற்கனவே ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (EPC) என்ற பதிவில் விரிவாகப் பார்த்திருக்கிறோம்.

ஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகங்களில் இதுவும் ஓன்று.

“ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் எந்த ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினர் ஆக வேண்டும்?

இதற்கு பதில் மிக எளிது.

நீங்கள் ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகமான FIEO – வில் உறுப்பினர் ஆனாலே போதுமானது.

தனியாக ஒவ்வொரு ஏற்றுமதி மேபாட்டு கழகத்திலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.

உதாரணத்திற்கு நீங்கள் வேளான் மற்றும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்துள்ளிர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

APEDA என்று அழைக்கப்படும் வேளான் மற்றும் உணவுப்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினராக வேண்டும்.

அதே நீங்கள் மூலிகை பொருட்களையும் தற்போது ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது நீங்கள் மூலிகை பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் தனியாக உறுப்பினராக பதிவு செய்ய வேண்டுமா என்று கேட்டால் அது தேவையில்லை.

FIEO வில் மட்டும் RCMC (Registration Cum Membership Certificate) என்று அழைக்கப்படும் பதிவு பெற்ற உறுப்பினர் சான்றிதழ் பெற்றாலே போதுமானது.

மேலும் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பொருளானது எந்த ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் கீழும் வராத பட்சத்திளும் இதே FIEO வில் உறுப்பினராகிக் கொள்ளலாம்.

FIEO வில் உறுப்பினர் ஆவதற்கான வழிமுறைகள் என்னென்ன?


என ஒவ்வொன்றின் தன்மைக்கேற்ப இவற்றில் மொத்தம் 13 வகை உள்ளன.

நீங்கள் ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் Multi-Products Group என்ற வகையின் கீழ் உறுப்பினராகிக் கொள்ளலாம்.

ஒவ்வொன்றுக்குமான கட்டண விபரங்களும் மேல தரப்பட்டுள்ளன.

புதிதாக உறுப்பினர் ஆவதற்கு கட்டணத் தொகையுடன் 1,000 ரூபாயும், சேவை வரியாக 12.36% சேர்த்துக் கட்ட வேண்டியிருக்கும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

Unit No.706, Spencer Plaza, 7th Floor,
769, Anna Salai, Chennai-600 002
Phone : +91-44-28497766/28497755/28493333,

Website : www.fieo.org

Toll Free Number : 1800 - 121 - 9000

நன்றியோடு, அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா

Download As PDF

16 comments:

kavitha said...

ஏமாற்றப்பற்றோரில் ஒருத்தரைத்தான் இப்போது உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இதைப்போல் இன்னும் இங்கு எத்தனையோ பேர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.//உண்மை தான்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஏற்றுமதி செய்து சம்பாதிப்பதைவிட ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் ஆரம்பித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது அப்பட்டமான உண்மை. // என் கணக்குப் படி PCK நீங்க 2 நாள் இலவசப் பயிற்சியிலேயே கொறஞ்சது 1,30,000 சம்பாரிச்சு இருந்திருக்கலாம்.. வாரம் ஒரு வகுப்புன்னா மாசம் 5,00,000.

subramaniam.T said...

Good news for all new exporter....

subramaniam.T said...

Good news for all new exporter....

Giri said...

Vanakkam PCKARUPPAIAH,

Great work,No words here.Keep it.

Anonymous said...

நன்றி திரு கருப்பையா அவர்களே

srinivasan salem said...

நன்றி திரு கருப்பையா அவர்களே

Guru Vallavan said...

உங்கள் கட்டுரையைப் படிக்கும்பொழுது
வாழ்க்கையில்,
முன்னேற,
சரியான பாதையை,
கண்டுபிடித்து விட்டேன் என,
நினைக்கிறேன்.
நன்றி நண்பரே.......

Karthikeyan said...

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே !!!!!

Karthikeyan said...

மாட்டுசாணம் ஏற்றுமதி ஆவது உண்மையா? உண்மையெனில் அது எவ்வாறு எப்படி அனுப்பபடுகிறது?

மேலும் ஏற்றுமதி செய்ய பணம் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே குறைந்த செலவில் எந்தந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யமுடியும்.... ஏற்றுமதியாகும் பொருட்கள் அறிய ஏதேனும் web site உண்டா?

tamil selvan said...

hallo your exports trainnig class excellent tamil selvan tiruchengode

dhileepan prabhakaran said...

THANK U SIR

Balaji laji said...

i got more infermation

thanks sir

kandhi selvanayagam said...

ஏமாற்றும் பயிற்சி நிலையம் ஏராளமாக உள்ளத்தை பகிரங்கமாய் தெரிவித்தமைக்கு பெரிய சபாஷ் உங்களை உளமாற நம்பி முன்னேற நம்பிக்கை யுடன் தொடர் கிறேன்.

Bala Manickam said...

ஏமாற்று உலகத்தில் தாங்கள் சத்தியத்தின் சாட்சியாக செயல்படுகிறிர்கள் தங்கள்க பணி மத்தானதானது

nayan tamil said...

ஓம் முருகா என்னும் நிறுவனம் பத்தாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது

jeeva said...

வணக்கம் நண்பரே உங்கள் ஏற்றுமதி வழிகாட்டி எனக்கு நல்ல பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நான் சென்னையில் வசிக்கிறேன் மளிகை மொத்த விலை கடை வைத்து உள்ளேன்,
நான் மலேசிய, சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கு அரிசி பருப்பு சப்ளை செய்யும் நண்பர் எனக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறேன் என்கிறார் இப்ப நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை
அதற்கு நான் என்னை எப்படி தயார் படுத்தி கொள்வது. உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நன்றி
வெங்கடேசன்.சீ
9043572089