இலவசமாய் துவங்கலாம் இணையதளம் சிறப்பு பதிப்பு (12.12.12)


நண்பர்களுக்கு வணக்கம் !
     
நமது “ஏற்றுமதி வழிகாட்டி“ இணையதளம் இன்று (12.12.12) தனது முதலாமாண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
  
தொடர்ந்து நமது “ஏற்றுமதி வழிகாட்டி“ இணையதளத்திற்கு வருகை தந்து தங்களது கருத்துக்களையும், ஆதரவையும் அளித்து நமது தளத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட, நாளைய ஏற்றுமதி உலகில் சாதிக்க காத்துக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முதலில் அன்பு கலந்த நன்றி !
  
இந்த இரண்டாம் ஆண்டு துவக்கத்தின் முதல் பதிப்பை, நம் தள நண்பர்களுக்காக சிறப்பு பதிப்பாக தருகிறேன். அப்படி என்ன சிறப்பு பதிப்பு என்கிறீர்களா ? முழுவதும் படியுங்கள். உங்களுக்கே தெரியும். இது சிறப்பு பதிப்பா, இல்லையா? என்று.
  
இன்றைய உலகில் எந்த ஒரு பொருளுக்கும் விளம்பரம் என்பது மிக மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று. இது வெறும் ஐம்பது பைசாவிற்கு விற்கும் ஷாம்புவிலிருந்து, கோடிகளில் விற்கும் வாகனம் வரை அனைத்திற்கும் அடங்கும்.
   
ஐம்பது பைசாவிற்கு விற்கும் ஒரு சாதாரண ஷாம்புவிற்கே விளம்பரம் தேவைப்படும் போது ? நாம் செய்யப் போவது ஏற்றுமதி. விளம்பரம் தேவைப்படாமலா இருக்கும்? நிச்சயம் தேவைப்படும்.

விளம்பரம் செய்ய பல வழிகள் இருப்பினும் ஏற்றுமதி நிறுவனத்திர்க்கான விளம்பரம் என்று எடுத்துக் கொண்டால் அது இணைய வழி விளம்பரமாகத்தான் இருக்கும்.

காரணம், இன்றைய உலகையே ஒன்றிணைத்து ஆண்டு கொண்டிருப்பது இணையதளம்தான். எனவே, ஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் அனைவரும் தங்களது நிறுவனப் பெயரில் அவசியம் ஒரு இணையதளம் தொடங்கிக் கொள்ளுங்கள்.

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் சொந்தமாக இணையதளம் துவங்க வேண்டுமென்றால் அதற்கு குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாயாவது வேண்டுமே, அதற்கு நான் என்ன செய்வது என்கிறீர்களா?
  
கவலையே வேண்டாம். நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், உங்களது நிறுவனப் பெயரில் சொந்தமாக இணையதளம் துவங்கலாம். எப்படி என்கிறீர்களா? வாருங்கள் உங்களுக்காகத்தான் இந்த பதிவு.

புதிதாக தொழில் துவங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சேவையை நமது இணைய நண்பனான கூகுள் தளம் செய்து வருகிறது.

இதில் உங்களுக்கு www.example.in என்ற பெயரில்  இணையதளமும், info@example.in என்ற பெயரில் ஒரு ஈ-மெயில் ஐடியும் துவங்கி கொள்ளலாம். இது முற்றிலும் கூகுள் தளத்தால் வழங்கப்படும் ஒரு இலவச சேவையாகும்.

அதற்கு உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, உங்களது பெயரில் உள்ள பான்கார்டு. ஆம்! உங்களின் பான்கார்டு ஒன்று மட்டுமே போதும் தாராளமாக நீங்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

எப்படி என்று பார்ப்போம் :

முதலில் http://www.indiagetonline.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஓப்பன் ஆகும் விண்டோவில்,

                                             
என்று ஒரு ஆப்ஷன் இருக்கும், அதனை கிளிக் செய்யுங்கள்.
பின்பு ஒப்பன் ஆகும் விண்டோவில்,
                                             


என்று ஒரு ஆப்ஷன் இருக்கும், தற்போது அதனை கிளிக் செய்யுங்கள். இப்போது கீழ்கண்டவாறு ஒரு பெட்டி திறக்கும்.

                          

இதில் Enter a domain here என்ற இடத்தில் உங்களது நிறுவத்தின் பெயரைக் கொடுத்து Check Availability என்பதை கிளிக் செய்யுங்கள். உதாரணத்திற்கு abcexports, sunexports போன்று.
    
தற்போது நீங்கள் கொடுத்துள்ள நிறுவனத்தின் பெயரில் (Domain Name) ஏற்கனவே வேறு ஏதேனும் இணையதளம் உள்ளதா என்பது தேடப்படும்.
   
அவ்வாறு எந்த ஒரு இணையதளமும் இல்லையெனில், கீழ்கண்டவாறு ஒரு ஆப்ஷன் தெரியும்.

                            
     
இதில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.
     
பின்னர் ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்கள் நிறுவனத்தின் முகவரி, பான்கார்டு எண், ஈ-மெயில் ஐடி போன்ற அனைத்து விபரங்களையும் உண்மையானதாகவே கொடுங்கள். பிறகு கீழிருக்கும்,

                                                                         
என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர், உங்களுக்கு கிழிருப்பதைப் போன்று ஒரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.

   
அவ்வளவுதான் உங்களது இணையதளம் துவங்கப் பட்டிருக்கும்.
       
தற்போது தங்களின் ஈ-மெயில் ஐடியை ஒப்பன் செய்து பாருங்கள். அதில் உங்களது நிறுவத்தின் இணையதளத்திர்க்கான பயனர் பெயர், கடவுச்சொல் மற்றும் அவற்றை வடிவமைப்பதர்க்கான லிங்க் கொடுக்கப் பட்டிருக்கும்.
       
இனி வேண்டிய வடிவில் உங்களது இணையதளத்தை நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கு டெம்ப்ளேட் டிசைன் செய்வது பற்றி ஓரலவாது தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கவனத்திற்கு :
       
தில் நீங்கள் கொடுக்கப் போகும் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப் பட்ட பின்னரே உங்களால் உங்கள் இணையதளத்தை பயன்படுத்த முடியும்.
     
இதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் காலநேரம் அதிகபட்சம் மூன்று நாட்கள். நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்களது இணையதளம் அதற்குள்ளாகவே ஆக்டிவேட் செய்யப்படும்.

உதவிக்கு தொடர்பு கொள்ளவும், நன்றி !
அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா

Download As PDF

21 comments:

lenin said...

நன்றி,, பயனுள்ள தகவல் தோழறே.....

Ra.THANGAVEL said...

hai nanba. earkanavea wepsite vaithullavarkal free wepsite thuvangalama?

Ra.THANGAVEL said...

hai nanba. nan ie code eaduthullean, EPC il compelsary member Aagavenduma.

Unknown said...

தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே,
பான் கார்டு வைத்திருக்கும் எவரும் இந்த இணையதளம் துவங்கலாம்,

Unknown said...

ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினராக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. நீங்கள் அதில் உறுப்பினராக விட்டால் உங்களுக்கு அதன் சலுகைகள் எதுவும் கிடைக்காது.

Anonymous said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே...
நன்றி..

Tamilvanan said...

nantri migavum payanullathaga irunthathu,nantri nanbare.

Unknown said...

MIGA PERUM THAGAVALUKKU NANDRI

Unknown said...

Thanks my freand by murali vellore

selva chennai said...

Thanks friend

Unknown said...

Nanbare miga payanulla thagaval. Thangalukku nandri. by Sathish .website uruvakkumpothu design Patri therinthu erukka vendum endru sonnirkal anal enakku theriyathu.design therinthavarkalidam koduthu design pannalama. email varum password id ragasiyamaga vaikka venduma. Please reply nanbare.

Anonymous said...

medcezir için gerekli bir kaynak bu. Paylaşım için teşekkürler.


Feel free to visit my webpage :: belgesel - ,

Ganesh Kumar said...

sir super work...

தனசேகர் said...

மிகவும் நன்றி நண்பரே...

Unknown said...

Nanba intha option illaiye.....ninga sonna antha website kulla pona i want free website option illave illa nanba

Unknown said...

நன்றி நண்பரே.. மிகவும் பயனுள்ள தகவல்

Unknown said...

நண்பா தனி நபராக ஏற்றுமதி செய்யலாமா?

Parthasarathy said...

very useful information. thank you sir.

Bala traders online markiting said...

மிக பயன்யுள்ள செய்தியை பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா

Unknown said...

முதலில் உங்களுக்கு மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் free website உள்ளதா?

Unknown said...

IEC வாங்கிட்டேன் சகோ,send your contact number