ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.50 லட்சம் கோடியாக சரிவு


நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டின், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 1.50 லட்சம் கோடி ரூபாயாக குறைந் துள்ளது.

இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (1.51 லட்சம் கோடி ரூபாய்) விட, 0.25 சதவீதம் குறைவாகும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா : இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங் உள்ளிட்டவை முக்கிய சந்தை களாகத் திகழ்கின்றன.
.
சர்வதேச பொருளாதார மந்த நிலையால், மேற்கண்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. இதனால், இந்நாடுகளில், இந்திய ஆபரணங்களுக்கான தேவைப்பாடு குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின், முதல் ஒன்பது மாத காலத்தில், மருந்து பொருட்கள் தவிர்த்து, ஜவுளி, பொறியியல் சாதனங்கள், பெட்ரோலியப் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

கணக்கீட்டு காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 25.09 சதவீதம் குறைந்து, 83,830 கோடியிலிருந்து, 62,619 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. 

அதே சமயம், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 79.72 சதவீதம் வளர்ச்சிகண்டு, 32,262 கோடி யிலிருந்து, 56,672 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நவரத்தினங்கள் : தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 15.59 சதவீதம் குறைந்து, 25,075 கோடியிலிருந்து, 21,166 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 

நவரத்தினங்கள் ஏற்றுமதி, 16.8 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1,064 கோடியிலிருந்து, 1,234 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வெள்ளி : வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 24.68 சதவீதம் அதிகரித்து, 2,544 கோடியிலிருந்து, 3,160 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

முத்துக்கள் ஏற்றுமதி, 9 லட்சத்திலிருந்து, 20 லட்சம் ரூபாயாகவும், செயற்கை கற்கள் ஏற்றுமதி, 85 கோடியிலிருந்து, 110 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.

வைரம் : கச்சா வைரங்கள் ஏற்றுமதி, 6.61 சதவீதம் குறைந்து, 6,045 கோடியிலிருந்து, 5,645 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபர ணங்கள் ஏற்றுமதி, 11,984 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 

இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (15,938 கோடி ரூபாய்) விட, 24.81 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு மாதத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 34.36 சதவீதம் குறைந்து, 7,909 கோடியிலிருந்து, 5,191 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. 

தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 10.92 சதவீதம் குறைந்து, 3,930 கோடியிலிருந்து, 3,501 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 19.38 சதவீதம் குறைந்து, 2,790 கோடியிலிருந்து, 2,249 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 

நவரத்தினங்கள் ஏற்றுமதி, 20.96 சதவீதம் வளர்ச்சியடைந்து, 146 கோடியிலிருந்து, 176 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

முத்துக்கள் : வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 3.33 சதவீதம் குறைந்து, 417 கோடியிலிருந்து, 403 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முத்துக்கள் ஏற்றுமதி, 15 லட்சத்திலிருந்து, 44 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. 

செயற்கை கற்கள் ஏற்றுமதி, 8.53 கோடியிலிருந்து, 2.30 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கச்சா வைரங்கள் ஏற்றுமதி, 36.29 சதவீதம் வீழ்ச்சிகண்டு, 680 கோடியிலிருந்து, 433 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

நன்றி  - Gem & Jewellery Export Promotion Council வெள்ளி18 ஜனவரி, 2013

மேலும் விபரங்களுக்கு : www.gjepc.org/

Download As PDF

0 comments: