ஏற்றுமதி ஒரு அறிமுகம்


நண்பர்களுக்கு வணக்கம் !

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.


காலத்தின் மாற்றத்திற்கேற்ப நமது தளத்தின் பதிவுகள் அனைத்தும் எளிய விளக்கங்களுடன் தற்போது மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

இந்த பதிவு புதிய நண்பர்களுக்காக : 

ஏற்றுமதி பற்றிய தகவல்களைத் தேடி அலைந்து கொண்டிருப்பவரா நீங்கள் அப்படியானால் இந்த வலைப்பதிவு உங்களுக்காகத்தான்.

ஏற்றுமதி துறையில்நுழைய நினைப்பவர்களுக்கு நல்ல ஒரு நண்பனாய் இந்த தளம் நிச்சயம் இருக்கும். பதிவுகளை படிக்கும்போது அது உங்களுக்கே தெரியும்.


ஏற்றுமதி செய்வது எப்படி ?

இந்த கேள்விக்கு விடை தேடி நிச்சயம் நீங்களும் அலைந்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.

நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் நீங்களும் கூட நினைத்திருக்கலாம் ஏற்றுமதி செய்ய பெரிய முதலீடும், நிறைய ஆங்கில அறிவும் தேவைப்படும் என்று.

அப்படி நீங்கள் நினைத்திருப்பிர்களானால் அந்த எண்ணத்தை முதலில் முதலில் அளித்துக் கொள்ளுங்கள்.

அதற்கு தேவைப்படுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

தன்னம்பிக்கை! தன்னம்பிக்கை!! தன்னம்பிக்கை!!!.

"முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்" இது முதுமொழி.

ஏற்றுமதி என்றல்ல எந்த துறையாயினும் சரி அதை முழு ஈடுபாட்டோடு, முழு நம்பிக்கையோடு, முழு மனதோடு செய்யுங்கள்.

என்றுமே அதன் எஜமானன் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.உங்களாலும் முடியும்.

ஏற்றுமதி செய்ய ஆர்வமிருந்தும், ஆசையிருந்தும் வழி தெரியாமல் திசை மாரியோர் எத்தனையோ பேர். அந்த வரிசையில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள்.

ஏற்றுமதியின்றி எந்த துறையிலும் உள் நுழையும் முன், முதலில் அதன் நெழிவு சுழிவுகளை கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

அப்படி ஏற்றுமதி துறையின் நெழிவு சுழிவுகளை கற்றுக் கொடுக்கும் ஒரு தளம்தான் இந்த தளம்.

இந்த தளத்தில் ஏற்றுமதி நிறுவனம் தொடங்குவதிலிருந்து, எப்படி நீங்கள் ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆவது என்பது வரை அனைத்து விபரங்களையும் தந்திருக்கிறேன்.

ஏற்றுமதிக்கென ஆங்கிலத்தில் எத்தனையோ வலைப்பதிவுகள் இருந்தாலும், நம் தமிழ் நண்பர்களுக்காக நம் தமிழ் மொழியில் ஒரு தளம் இது.

ஏற்றுமதி : எந்த ஒரு துறைக்கும் இல்லாத அளவுக்கு அரசு பல சலுகைகளை வழங்கும் ஒரே துறை ஏற்றுமதி.

காரணம், அந்நியச் செலவாணி. எந்த ஒரு நாட்டுக்கும் அதன் அந்நியச் செலவாணி கையிருப்பு என்பது மிகமிக முக்கியம்.

அதிலும் நமது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அது இன்னும் முக்கியம்.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கும் சக்திகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று உண்டென்றால் அது இந்த அன்னிய செலவாணியாகத்தான் இருக்கும்.

இது அமெரிக்கா முதல்.ஆப்பிரிக்கா வரைஅத்தனை நாடுகளுக்கும் பொருந்தும்.

அப்படிப்பட்ட அந்த அந்நிய செலவாணியை நமது நாட்டுக்குள் கொண்டு வருவது யாரென்று நினைக்கிறீர்கள் ? வேறு யாருமல்ல நாம்தான். இதை நிச்சயம் நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

அதனால்தான் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அந்நாட்டின் ஏற்றுமதியாலருக்கு பல சலுகைகளை வழங்குகிறது.

அவை பற்றிய அனைத்து விபங்களையும் தொடர்ந்து தருகிறேன்.

அதற்கு முன், இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான IEC Number எனும் Import Export Code Number - எடுத்துக் கொண்டு வாருங்கள்.

அதைப் பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் கீழிருக்கும் லிங்கில் IE Code பெறுவது எப்படி ? என்ற தலைப்பினில் பத்து பாகங்களாகப் பிரித்துக் கொடுத்துள்ளேன்.

இவைகளை முதலில் படித்துக் கொள்ளுங்கள்.


நன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

5 comments:

Ra.THANGAVEL said...

Hai Nanba: i will realy wait for your next very,very,yousfull comments in (ECGC,and etc...)

syed abuthahir said...

தோழர் கருப்பையா அவர்களே
தனியாக லோன் பெற்றவுடன் ஒரு தொழில் துவங்கி அதனை தொழில் மையத்தில் பதிவு செய்து அதற்காக மானியம் பெற முடியுமா?

syed abuthahir said...

தோழர் கருப்பையா அவர்களே
தனியாக லோன் பெற்றவுடன் ஒரு தொழில் துவங்கி அதனை தொழில் மையத்தில் பதிவு செய்து அதற்காக மானியம் பெற முடியுமா?

Unknown said...

நிச்சயம் முடியும் நண்பரே,

Unknown said...

eppadi buyer kandupidiapthu?