நண்பர்களுக்கு வணக்கம் !
ஏற்றுமதிலயார்களுக்கு உதவுவதற்காகவே மட்டுமே இங்கு எத்தனையோ வகையான இணையதளங்கள் இருக்கின்றன.
அவற்றை நாம்தான் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்துவதில்லை என்று சொல்வதை விட அதைப்பற்றி நமக்கு தெரிந்திருக்கவில்லை என்பதுதுதான் உண்மை.
நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய இணையதளங்களைப் பற்றியும், அவை நமக்கு எந்தெந்த விதத்தில் உதவியாய் இருக்கும் என்பதைப் பற்றியும் "உதவும் தளங்கள்" என்ற தலைப்பினில் வரும் பகுதிகளில்தருகிறேன்.
.
அந்த வரிசையின் முன்னோட்டமாக இந்த முதல் பதிவு.
இன்றைய உலகில் இணையதளத்தின் பயன்பாட்டைப் பற்றி உங்களுக்கு யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
உலகையே உங்கள் கண்முன் கொண்டு வரும் ஒரு சக்தி வாய்ந்த சாதனம் இணையதளம். இது நவீன காலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.
இன்றைக்கு எந்த ஒரு துறையிலும் இணையத்தின் பயன்பாடு மிகமிக அதிகம். அதுவும் ஏற்றுமதி துறையில் இதன் பயன்பாடு மிகமிக அதிகம்.
ஏற்றுமதியாளராக நினைக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் முடிந்த வரை கணிணி மற்றும் இணையம் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு தெரியவில்லையா ? பிறரிடம் கேளுங்கள்.
உங்களுக்கு எந்த ஒன்றும் தெரியாமல் இருப்பதில் ஒரு தப்புமில்லை. ஆனால் அவை தெரியாமலேயே இருப்பதுதான் தப்பு. அதை விட பெரிய தப்பு, அதை நீங்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்காததுதான்.
காரணம், இங்கு எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை.
சரியாகச் சொல்வதென்றால் கேள்விதான் எந்த ஒரு மனிதனையும் மேன்மையாக்கும்.
அதனால் தெரியாதைக் கேளுங்கள். அதுவும் நன்கு அதைப்பற்றி தெரிந்தவரிடம் கேளுங்கள்.
சரி நண்பர்களே, விஷயத்துக்கு வருவோம்.
ஏற்றுமதி இறக்குமதி உரிமம் எண் பெரும் ஒவ்வொரு ஏற்றுமதியாலருக்கும் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சினை. அவர்களின் பொருளுக்கான சரியான இறக்குமதியாலரை, சரியான நேரத்தில் கண்டுபிடிப்பதுதான்.
இறக்குமதியாலரை கண்டு பிடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி வரும் பகுதிகளில் விரிவாக தருகிறேன்.
அதற்கு இந்த பதிவையும் சற்று படித்துக் கொள்ளுங்கள்.
இன்றைய உலகில் நமக்கு நன்கு தெரிந்தவர்களே, நம்மை சுற்றியுள்ளவர்களே நம்மை ஏமாற்றும் போது, முன்பின் யாரென்றே தெரியாத இறக்குமதியாளர் நம்மை ஏமாற்ற மாற்றார் என்று என்ன நிச்சயம் ?
இது இன்று மட்டும் என்றில்லை. இன்னும் ஆயிரமாயிரம் வருடங்கள் ஆனாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
எனவே, நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சரி,அங்கிங்கு தேடி அலைந்து ஒரு வழியாக எப்படியோ இறக்குமதியாலரை கண்டுபிடித்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்படி நீங்கள் தேடிக் கண்டுபிடித்த அந்த இறக்குமதியாளர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை.
ஆனால் அதே இறக்குமதியாளர் உங்களை ஏமாற்ற நினைப்பவராக இருந்தால் ?
எப்படி நாம் அதை தெரிந்துகொள்வது ?
இதைப்போல ஏமாற்றும் இறக்குமதியாலர்களிடமிருந்து ஏமாறாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் ஒரு இணையதளம்தான் SKYMINDER எனும் இணையதளம்.
இதன் இணையதள முகவரி : http://www.skyminder.com
இந்த இணையதளம் உலகிலுள்ள ஐம்பது மில்லியன்களுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தகவல்களை திரட்டி வைத்திருக்கிறது.
நீங்கள் எந்த இறக்குமதியாலரைப் பற்றிய தகவகல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அவருடைய முகவரியை மட்டும் இவர்களிடம் கொடுத்தால் போதும் அவரின் ஒட்டுமொத்த விபரங்களையும் கொடுத்து விடுவார்கள்.
அதற்கு நீங்கள் இவர்களின் இணையதளத்தில் உறுப்பினராக வேண்டும்.
உறுப்பினர் ஆகிய பின் முதல் ஒன்றிரண்டு பேரைப் பற்றிய விபரங்களை கட்டணம் ஏதுமின்றி தெரிந்து கொள்ளலாம்.
பிறகெனில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
சரி நண்பர்களே, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
நன்றியோடு அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா
8 comments:
Hai Nanba : member registration amount?
நண்பரே, அவர்களின் தளத்திற்கு சென்று பாருங்கள். கட்டண விபரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நண்பா: தங்களுடைய தகவலுக்கு நன்றி.
நண்பா: தங்களுடைய தகவலுக்கு நன்றி.
அன்புள்ள நன்பர் கருப்பையா அவர்களுக்கு என் அன்பான வணக்கம் நான் எதேச்சையாக உங்கள் தளத்தை பார்வையிட்டேன் எனக்கும் ஏற்றுமதி செய்யும் ஆசை வ்ந்ததற்க்கு நீங்கள் காரணமாகிவிட்டீர்கள் மிக்க நன்றி உங்களை பாராட்ட தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சம் நன்றி என்ற ஒரு வார்த்தை பத்தாது ஆகயால் உங்களை வணங்குகின்றேன்
hai friend ungal thagaval super.but enakku arambame theriyadu nan eppadi therindu kolvadu.TIN no peruvathu matrum aduthu enna seivadu ponra adipadai vivarangal engalukku thevai.
you are doing good job.....keep it up.
ரும் தராத்து.இறக்குமதியாளரை தெரிந்து கொள்வதென்பது.புதியவர்களுக்கு மிக்க உதவியாய் இருக்கும்.நன்றி.
Post a Comment