நண்பர்களுக்கு வணக்கம் !
ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது எப்படி ?
இந்த கேள்விக்கு உங்களுக்கு விடை தெரிய வேண்டுமாயின் முதலில் சர்வதேச வர்த்தக விதிமுறைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
ஏற்றுமதி துறையைப் பொறுத்தவரையில் விலை நிர்ணயம் என்பது மிகமிக முக்கியம். காரணம் ஏற்கனவே சொல்லியது போல் ஏற்றுமதி துறை ஒன்றும் அவ்வளவு எளிதான துறை அல்ல.
இருந்தும் நம்மில் பெரும்பாலானோர் ஏற்றுமதி துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முதல் கராணம் இதில் லாபம் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணம்தான்.
இதில் நமக்கு மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது.
"யார் ஒருவர் எந்த ஒரு செயலையும் லாபம் ஒன்றையோ குறிக்கோளாகக் கொண்டு துவங்குகுகிறாரோ இறுதியில் நிச்சயம் அது தோல்வியில்தான் முடியும்" இதை நான் சொல்லவில்லை -
இன்று இணைய உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் Facebook-ஐ உருவாக்கிய மார்க் ஜுக்கெர்பெர்க் சொன்னது.
ஆம்! எந்த ஒரு செயலையும் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு துவங்காமல் முதலில் அவற்றை கற்றுக்கொள்ள நினையுங்கள்.
வெற்றி நிச்சயம் !
"கற்க கற்க நமக்கு
கடல் கூட சிறு துளிதான்...!"
Incoterms - International Commercial Terms
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இயங்கி வரும் ICC எனப்படும் International Chamber of Commerce - ஆல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் உலகளாவிய விலை நிர்ணய முறையைக் கொண்டு வர முயற்சித்ததன் பலன்தான் இந்த Incoterms எனப்படும் சர்வதேச வர்த்தக விதிமுறை கொள்கை.
இவை மொத்தம் பதிமூன்று வகைப்படும், அவைகள் :
- EXW - Ex Works,
- FCA - Free Carrier,
- FAS - Free Alongside ship,
- FOB - Free On Board,
- CFR - Cost And Freight,
- CIF - Cost, Insurance And Freight,
- CPT - Carriage Paid To,
- CIP - Carriage And Insurance Paid To,
- DAF - Delivered At Frontier,
- DES - Delivered Ex-Ship,
- DEQ - Delivered Ex-Quay,
- DDU - Delivered Duty Unpaid,
- DDP - Delivered Duty Paid.
எந்த ஒரு இறக்குமதியாளரும் உங்களிடம் முதலில் எதிர்பார்ப்பது உங்களது பொருட்களின் விபரத் தொகுப்பை அல்ல. அந்த பொருட்களின் விலை தொகுப்பைதான்.
எனவே, அவர்கள் கேட்கும் முன்னரே உங்களது பொருட்களுக்கான விலை என்ன? என்பதை உங்களுக்கு நிர்ணயம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கு முதலில் உங்களுக்கு மேற்சொன்ன 'சர்வதே வர்த்தக விதிமுறைகள்' பற்றிய அனைத்து விபரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கு வரும் பகுதி வரை காத்திருங்கள்.
நன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா
10 comments:
'சர்வதே வர்த்தக விதிமுறைகள்' பற்றிய அனைத்து விவரங்கள் கொடுங்கள்
-நன்றி
அன்பருக்கு வணக்கம். கடந்த 10 வருடங்களாக சில நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது சில நாட்களாக சொந்தமாக தொழில் தொடங்கும் ஆசையில் என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஏற்றுமதி செய்யலாம் என மனம் விரும்பியது. அதன் அடிப்படை கூட தெரியாமல் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ஆங்கில மொழியிலேயே பெரும்பாலும் இணையத்தளங்கள் இருந்ததால் சரிவர புரியாமல் இருந்தது. உங்கள் இணையத்தை இன்றுதான் பார்த்தேன். எனக்கு தேவையான பெரும்பாலான தகவல்கள் இங்கேயே கிடைத்து விட்டன. மிக்க மகிழ்ச்சி. உண்மையில் மிகப்பெரிய சேவை செய்து வருகிறீர்கள். எந்தப்பிரதிபலனும் பாராமல் இத்தகைய உதவி கிடைப்பது மிகவும் அரிது. என்னைப்போன்ற புதியவர்களுக்கு இதனினும் தெளிவான விளக்கங்கள் கிடைப்பது மிக அரிது. என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்பது குறித்த விளக்கமான உங்கள் பதிவை எதிர்பார்த்து இருக்கிறேன். நன்றி :)
nanbanuku mikka nantri.....sonthamaga tholil seiya vendum yentra aasai mattum thaan yennitam erunthathu...uthai seiya oruvarum ellai ......ungalin entha sevai enaku mega uthaviyaga ullathu
அன்பருக்கு வணக்கம் பக்கத்து ஊரில் இருந்து கொன்டு உங்களது பதிவை கான ரொம்பவும் தவரிவிட்டேன் மிக்க நன்றி அன்புடன் சிக்கந்தர்.காரைக்குடி
Hi, What is your email ID to reach you, I am Jain from Pollachi, Recently got IE Code and looking for the next steps.
Seago.Impex@gmail.com
Thanks
Jain
நண்பருக்கு வணக்கம் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் நிறுவனம் ஆரம்பித்தாகி விட்டது IEC CODE பெற்றாகிவிட்டது order கிடைத்து விட்டது
அடுத்து இறக்குமதியாளர் கௌட்கும் பொருளை வாங்க வேண்டும் . வங்கியை அணுகி கடன் பெருவது எப்படி
கடன் பெற்ற பின் பொருளை பேக்கிங் செய்ய எங்கு கொண்டு செல்ல வேண்டும் அடுத்தகட்டமாக அந்த பொனுளை எங்கு கெண்டு செல்ல வேண்டும் என்று விவரிக்குமாறு மிகவும் தாழ்மையடன் கேட்டுக் கெள்கின்றௌன் umashankar.kanna@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பாற்க்கின்றேன் நன்றி.
Dear Sir,
i am very happy to visit your blog. fist i like to say Thank you. this is is a very big job... i wish your great effort. it's very useful for me, and one request pls inform me witch one i read fist and second etc,,,, so pls give the list of content. it's useful for every one..
Thank you,,
By
M.Sridhar
very useful informations
how can I contact u sir
HOW TO DOWNLOAD YOUR BOOKS,PLEASE SEND ME THE DETAILS
MY MAIL ID -auroadhithi@gmail.com
Post a Comment