பாகம் - 5 ரப்பர் ஸ்டாம்ப் சீல்


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் நாம் நமது ஏற்றுமதி நிறுவனத்திற்கு என என்ன மாதிரியான ரப்பர் ஸ்டாம்ப் சீல்கள் தேவைப்படும் என்றும் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.

பொதுவாக நமக்கு நான்கு வகையான ரப்பர் ஸ்டாம்ப் சீல்கள் தேவைப்படும். அவைகள் :
   
1. அட்ரஸ் சீல், (ADDRESS SEAL)
2. ஒவல் சீல் அல்லது ரௌன்ட் சீல், (OVAL SEAL OR ROUND SEAL)
3. ஃபார் சீல், (FOR SEAL)
4. ஏர்மெய்ல் சீல் (AIR MAIL SEAL)

சரி, இவைகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.


(1) அட்ரஸ் சீல் (ADDRESS SEAL) :

இதில் உங்கள் பெயர் உங்கள் நிறுவன பெயர் மற்றும் உங்கள் முழு முகவரி ஆகியவைகள் இருக்க வேண்டும்.

நீங்கள் உங்களது லெட்டர் ஹெட்டில் எவ்வாறு எவ்வாறு உங்கள் முகவரியை அச்சடித்திருக்கிறீர்களோ அதே முகவரியில் இந்த அட்ரஸ் சீலை அச்சடித்து கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு :

S.Karan 
Moon Exports 
#38,Palakarai 
Trichy Tamilnadu 
India PIN:625431 
Mobile:+91-9999966666

(2) ஒவல் சீல் அல்லது ரௌன்ட் சீல்  (OVAL SEAL OR ROUND SEAL) :

ஒவல் சீல் என்பது வேறொன்றுமல்ல, முட்டை வடிவில் இருக்கும்.

இதன் நடுப்பகுதியில் உங்கள் நிறுவன முகவரியும், மேற்புறத்தீழ் உங்கள் பெயரும் கீழ்ப்பகுதியில் உங்களுடைய அஞ்சல் பகுதியின் ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர் மற்றும் பின்கோடு ஆகியவைகள் இருக்க வேண்டும்.

இதில் உங்கள் முழு முகவரியும் தேவையில்லை. இதை நீங்கள் ரௌன்ட் சீலாக வட்ட வடிவத்திலாக கூட அச்சடித்து கொள்ளலாம்,
 
(3)  ஃபார் சீல் (FOR SEAL) :

இதில் உங்கள் நிறுவனத்தின் பெயரும், நீங்கள் என்ன வகையான ஏற்றுமதியாளர் என்பதும் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு,        

                                                     For MOON EXPORTS 

                                                     Proprietor 


இதில் உங்கள் நிறுவன பெயருக்கு முன்பாக For என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல் நிறுவன பெயருக்கும் Proprietor என்பதற்கும் இடையில் சற்று இடைவெளி இருக்க வேண்டும்.

இதில் ஏன் இடைவெளி என்று கேட்கிறீர்களா? இதுதான் நீங்கள் கையெழுத்து இட வேண்டிய இடமாகும்.

(4) ஏர் மெய்ல் சீல் (AIR MAIL SEAL) :

இது மிகவும் சுலபாகும் ஏனெனில் இதில் இருக்க வேண்டியதே ஏர் மெய்ல் என்ற ஒன்றே ஒன்றுதான் ஆம் AIR MAIL என்று மட்டும் அச்சடித்து கொள்ளுங்கள். இவைகளே போதுமானது.

உதாரணத்திற்கு :

AIR MAIL

சரி ஸ்டாம்ப் சீல்கள் எல்லாம் அச்சடித்துக் கொண்டோம். இவைகளின் பயன்கள் என்னென்னவென்று பார்ப்போம்.

அட்ரஸ் சீல் இது நீங்கள் அனுப்பும் கடித உரைகளில் அச்சடிக்க பயன்படும்.

ஒவல் சீலும் ஃபார் சீலும் உங்களது லெட்டர் ஹெட்டில் சீல் இட, பேங்கில் கணக்கு துவங்க, IE Code விண்ணப்பிக்க என பல வகைகளிலும் தேவைப்படும்.

ஏர் மெய்ல் சீல் இது நீங்கள் வெளிநாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பும் போது கடித உரையினில் அச்சிட பயன்படும்.

சரி, இதுவரையிலும் நாம் IE Code எடுப்பதற்கான அடிப்படை தேவைகளை பார்த்து விட்டோம்.

மீண்டும் அடுத்த பதிவில் வேறொரு தலைப்பில்,

நிறைகள் இருந்தால் பிறரிடம் சொல்லுங்கள்,
குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்!

அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

2 comments:

kavitha said...

ரொம்ப நன்றி. பயனுள்ளதாக இருக்கு

Rifaiias said...
This comment has been removed by the author.