மாதிரி அனுப்புவது எப்படி? (Sample)


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் மாதிரி (Sample) அனுப்புவது எப்படி? என்பதைப்பற்றி பார்ப்போம்.

எந்த ஒரு பொருளுக்கும் அதன் தரம் என்பது மிக முக்கியம். அதுவும் ஏற்றுமதி துறைக்கு அது இன்னும் மிக முக்கியம்.


காரணம், எந்த ஒரு இறக்குமதியாளரும் உங்களது பொருளின் தரம் தெரியாமல் உங்களுக்கு ஆர்டர் கொடுக்க மாட்டார்கள்.

முதலில் உங்கள் மேலும் உங்களது நிறுவத்தின் மேலும் அவருக்கு நம்பிக்கை வரவேண்டும். அடுத்து உங்களது பொருளுக்கான விலையை அவர் ஒப்புக்கொள்ள கொள்ள வேண்டும். 

பிறகு, உங்களது பொருளின் தரம் அவருக்கு பிடித்திருக்க வேண்டும்.

அடுத்துதான் உங்களுக்கு ஆர்டர் தருவதா? வேண்டமா? என்பதை  அவர் முடிவு செய்வார். 

எந்த ஒரு இறக்குமதியாளரும் உங்களுக்கு ஆர்டர் தரும் முன் உங்களது பொருளின் தரம் அறியவேண்டி, முதலில் அந்த பொருளின் மாதிரியை (Sample) தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்பார்கள்.

நாமும் தேடி அலைந்து அவருக்கு நல்ல தரத்தில் சாம்பிள் ஒன்றை அனுப்பி வைப்போம். அவருக்கும் அது பிடித்துப்போய் உங்களுக்கு ஆர்டர் கொடுப்பார். 

நீங்களும் ஆர்டர் கிடைத்த மகிழ்ச்சியில் பொருட்களை வாங்கி அனுப்பி வைப்பீர்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி மேலும் உங்களுக்கு நீடிக்குமா? இல்லையா? என்பதை உங்களது பொருளின் தரம்தான் முடிவு செய்யும்.

நிறைய பேர் பொதுவாக தப்பு செய்வது இந்த இடத்தில்தான். 

எப்படி என்கிறீர்களா? சொல்கிறேன் ;

பொதுவாக எந்த ஒரு பொருளையும் அதன் தரத்தைக் கொண்டு மூன்று வகையாக பிரிப்பார்கள்.

1. முதல் தரம் (First Quality) 
2. இரண்டாம் தரம் (Second Quality) 
3. மூன்றாம் தரம் (Third Quality)

இதில் முதல் தர பொருட்களைத்தான் (First Quality Products) பொதுவாக Export Quality என்று சொல்வார்கள்.

ஏற்றுமதியாளர்கள் செய்யும் முதல் தவறு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

இறக்குமதியாளர் உங்களிடம் சாம்பிள் கேட்டதும் எக்காரணத்தைக் கொண்டும் முதல் தர பொருட்களை (First Quality Products) அவர்களுக்கு அனுப்பி வைக்காதீர்கள்.

மாறாக இரண்டாம் தர பொருட்களையே (Second Quality)  அவர்களுக்கு சாம்பிளாக அனுப்புங்கள்.

காரணம், நீங்கள் முதல் தர பொருட்களை சாம்பிளாக அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 

இறக்குமதியாலருக்கு உங்களது பொருளின் தரம் (Quality) பிடித்துப்போய் ஆர்டர் தருகிறார் எனில், அவர் நீங்கள் அனுப்பப்போகும் பொருட்களும் அதே தரத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் உங்களுக்கு ஆர்டர் தந்திருகிறார் என்றுதான் அர்த்தம். 

ஆனால், ஆர்டர் கிடைத்த பிறகு உங்களுக்கு அதே தரத்தில் (First Quality), அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

நீங்கள் முதல் தர பொருட்களை மாதிரிகளாக அனுப்பி விட்டு, ஆர்டர் கிடைத்த பின் அனுப்பும் பொருட்கள் அதே தரத்தில் இல்லையெனில் உங்களது ஆர்டருக்கான மொத்தத் தொகையை விட குறைந்த அளவுதான் வந்து சேரும்.

ஒரு சில நேரங்களில் உங்களது பொருட்கள் தரமானதாக இல்லை என்று கூறி அதனை அவர்கள் பெறாமல் கூட போகலாம்..

எனவே, எக்காரணத்தைக் கொண்டும் மாதிரிகள் (Samples)  அனுப்பும்போது முதல் தர (First Quality) பொருட்களை மாதிரிகளாக அனுப்பாதீர்கள்.

இப்போது உங்களுக்கு “ஏற்றுமதி செய்யப்போகும் பொருளின் தரம் எப்படி இருக்க வேண்டும்?” என்பது பற்றி ஓரளவுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் நீங்கள், முதலில் உங்களது இறக்குமதியாலருக்கு அனுப்பப்போகும் சாம்பிள் எப்படி இருக்க வேண்டும் என்றும், அதனை எவ்வாறு அவர்களுக்கு அனுப்புவது என்றும் தெளிவாக தெரிந்து வைந்திருக்க வேண்டும்.

காரணம், மற்ற துறைகளைப் போன்றதல்ல இந்த ஏற்றுமதி துறை.

மற்ற துறைகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கவனமாய் இருந்தால் போதும். ஆனால், ஏற்றுமதி துறையில் ஒவ்வொரு செயலிலும் மிகமிக கவனமாய் இருக்க வேண்டும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஏற்றுமதி துறை மற்றத் துறைகளைக் காட்டிலும் சற்றுக் கடினமான ஒரு துறை.

உடனே, “கடினமான துறையா?” என்று பயம் கொள்ள வேண்டாம்.

கற்றுக்கொள்ள, கற்றுக்கொள்ள கடலளவு விஷயம் கூட உங்களுக்கு கடுகளவாய் மாறிடும். 

அதற்குத்தான் நமது “ஏற்றுமதி வழிகாட்டி” தளம் இருக்கிறதே, பின்னர் ஏன் பயம்? சரி, பதிவிக்கு வருவோம்.

சாம்பிள் அனுப்புவது எப்படி ?

சாம்பிள்களை பொதுவாக Speed Post மற்றும் DHL Courier போன்றவற்றிலேயே அனுப்பலாம். இவை அவற்றின் விலை மதிப்பைப் பொருத்து மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை :

1. Below 10,000 Rs,
2. 10,000 Rs to 25,000 Rs,
3. Above 25,000 Rs.

இவைகள் பற்றி இப்போது பார்ப்போம்.

(1) Below 10,000 Rs

நீங்கள் அனுப்பும் சாம்பிளின் மொத்த மதிப்பு பத்தாயிரம் ரூபாய்க்கு கீழாக (Below 10,000 Rs) இருக்கும் பட்சத்தில் இந்த முறையில் அனுப்பலாம்.

இந்த முறையில் சாம்பிள் அனுப்புவதற்கு உங்களது நிறுவனத்தின் லெட்டர் ஹெட்டில் எழுதப்பட்ட உறுதிமொழி கடிதம் (Declaration Form) வழங்க வேண்டும்.

(2) 10,000 Rs to 25,000 Rs

நீங்கள் அனுப்பும் சாம்பிளின் மொத்த மதிப்பு பத்தாயிரம் ரூபாய்க்கு மேலாகவும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு கீழாகவும் (10,000 Rs to 25,000 Rs) இருக்கும் பட்சத்தில் இந்த முறையில் அனுப்பலாம்.

இந்த முறையில் சாம்பிள் அனுப்புவதற்கு உங்களது நிறுவனத்தின் லெட்டர் ஹெட்டில் எழுதப்பட்ட உறுதிமொழி கடிதம் (Declaration Form) மற்றும் உங்களது வங்கியில் வழங்கப்படும் Not Involved Foreign Currency கடிதமும் வழங்க வேண்டும்.

(3) Above 25,000 Rs.

நீங்கள் அனுப்பும் சாம்பிளின் மொத்த மதிப்பு இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேலாக (Above 25,000 Rs) இருக்கும் பட்சத்தில் இந்த முறையில் அனுப்பலாம்.

இந்த முறையில் சாம்பிள் அனுப்புவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் :

1.Declaration Letter,
2.Bank Letter,
3.Invoice Bill,
4.GR/PP Form.

பொதுவாக இந்த மூன்று முறைகளில்தான் மாதிரி அனுப்ப வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் வெளிநாடு செல்லும்போது அவர்களிடம் கூட உங்களது பொருட்களுக்கான மாதிரிகளை கொடுத்தனுப்பலாம்.

கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், நீங்கள் அனுப்பும் மாதிரிகள் ஒவ்வொன்றிலும் Sample for Export, No Commercial Value என்று குறிப்பிட வேண்டியது மிக மிக அவசியம்.

அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டியதற்கான காரணம் நீங்கள் அனுப்புவது மாதிரி மட்டுமே என்பதை தெரிவிப்பதர்காகத்தான்.

இன்னும் விபரமாய் இவைகள் பற்றி கூறலாம் ஆனால் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

காலம் கனிந்தால் வேறொரு பதிவில் இவைப்பற்றி இன்னும் அதிகப்படியான விபரங்கள் தருகிறேன்.

நன்றியோடு, அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா

Download As PDF

8 comments:

kavitha said...

படிக்க படிக்க நெறைய சந்தேகங்கள் வருது....
எங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரீது ...

ரொம்ப நன்றி PCK

Unknown said...

தகவலுக்கு நன்றி

Unknown said...

தகவலுக்கு நன்றி

Unknown said...

thanks for your information

saravanan said...

Very useful information

Balaji said...

Hi dude, im Balaji from Namakkal. I have planned to export in proprietor basis. I haven't much knowledge of it but now, i hope that i will get more information from your website. Keep it up. Very thanks to you dude..

Unknown said...

if we sent second quality sample mean how can we get order.bcoz there ve chances to reject the sample for low quality la so pls tell me correct suggestion yar pls

Unknown said...

REALLY USEFUL INFORMATION. THANK YOU PCK