நண்பர்களுக்கு வணக்கம் !
உங்களுக்கு ஏற்றுமதி பற்றி A to Z தெரிந்துகொள்ள வேண்டுமா? வாருங்கள் அப்படியெனில் உங்களுக்காகத்தான் இந்த
பதிவு.
நம்மில் பெரும்பாலோனோருக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய கேள்வி ஏற்றுமதி பற்றி
எப்படி நாம் முழுமையாக தெரிந்து கொள்வது?
என்னிடம் பலர் கேட்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று.
“ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும்
ஏற்றுமதி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டால் என்னால் ஏற்றுமதி பற்றி முழுமையாக
கற்றுக்கொள்ள முடியுமா?” பலர் என்னிடம் இப்படி கேட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் ஒரே பதில் “நிச்சயமாக முடியாது” என்பதுதான். என்னால் இதை ஆணித்தரமாக சொல்ல
முடியும்.
காரணம் இங்கு இருப்பவைகளில் பலவும் ஏற்றுமதி பயிற்சி
நிறுவனங்களாய் அல்ல, அவை உண்மையில் ஏமாற்றும் பயிற்சி நிறுவனங்களாய்தான் உள்ளன.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள
மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதி பற்றி ஏற்றுமதி மேலாண்மை (Export Management) என்ற மூன்றாண்டு பட்டப்படிப்பு, நான்காண்டு
பட்டப்படிப்பு என தனி பட்டப்படிப்பே இருக்கிறது.
அப்படி மூன்றாண்டு, நான்காண்டு படிக்க வேண்டிய
பட்டயப்படிப்பை எப்படி உங்களால் ஒரே நாளிலோ அல்லது ஒரே மாதத்திலோ தெரிந்துகொள்ள
முடியும்.
இதைத்தான் ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் என்ற
பெயரில் பலர் செய்து வருகின்றனர்.
சற்று சிந்தித்து பாருங்கள் ‘எப்படி இது
சாத்தியமென்று?’
இது மருத்துவம் படிக்காமலேயே நீங்கள் மருத்துவர்
ஆகலாம் என்பதைப் போன்றதுதான்.
அப்படியெனில் “ஏற்றுமதி மேலாண்மை (Export Management) படிப்பு படித்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி
செய்ய முடியுமா? அல்லது மற்றவர்களாலும் முடியுமா?” என்று நீங்கள் கேட்கலாம்.
“முடியும், நிச்சயம் உங்களாலும் முடியும்”
முடியும் என்று நினைத்ததால்தான் அன்று அலெக்ஸாண்டர் கிராகம்பெல்லால் தொலைபேசியை
கண்டுபிடிக்க முடிந்தது, இன்று பில்கேட்ஸால் மைக்ரோசாஃப்டை உருவாக்க முடிந்தது.
ஒரு முதுமொழி உண்டு ‘அனுபவமே சிறந்த பாடம்’ என்று.
அதையேதான் உங்களிடம் மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
‘அனுபவமே சிறந்த பாடம்’
சரி, பதிவிற்கு வருவோம்.
ஏற்றுமதி பற்றி A to Z தெரிந்துகொள்ள வேண்டுமா?
ஏற்றுமதி பற்றிய அனைத்து விபரங்களையும், அனைத்து நுணுக்கங்களையும், அனைத்து வழிமுறைகளையும்
உள்ளடக்கிய ஒரு அருமையான புத்தகத்தைப் பற்றியதுதான் இந்த பதிவு.
Export Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்
இது ஒன்றும் வெற்றுப் புத்தகமல்ல. உங்களின் வெற்றிக்கு வித்திடப் போகும் வெளிச்சமிகு
புத்தகம்.
உங்களது ஏற்றுமதி பயணப்பாதையில் உறுதுணையாய் இருக்கும் ஒரு பாதுகாவலன்.
பெரிய பெரிய ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் முதல் ஏற்றுமதி சார்ந்த அரசு
அலுவலங்கள் வரை இந்த புத்தகம் உண்மையில் ஒரு பொக்கிஷம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
1995-ஆம் ஆண்டு தனது முதல் பதிப்பை துவங்கிய இந்த புத்தகம் இன்று
தனது பதினெட்டாவது பதிப்பைக் கண்டிருக்கிறது என்றால் அதன் வெற்றியை சற்று
எண்ணிப்பாருங்கள்.
இந்த பெரியதொரு வெற்றிக்கு காரணம் அதன் உள்ளடக்கமும் அதன்
எளிமையும்தான்.
“பிறரின் உதவியில்லாமல் இந்த ஒரு புத்தகத்தை மட்டும்
துணையாக வைத்துக்கொண்டு உங்களால் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யமுடியுமா?” என்று
யாராயினும் உங்களிடம் கேட்டால் அவர்களிடம் நீங்கள் தைரியமாக சொல்லலாம் “என்னால்
முடியும்” என்று.
இந்த அரியதொரு புத்தகத்தை நீங்களும் படிக்க வேண்டும் என்ற நோக்கில் நமது ‘ஏற்றுமதி
வழிகாட்டி’ தளம் மூலமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
புத்தகத்தின் பெயர் : Export Do It Your Self,
ஆசிரியர் : M.I.Mahajan,
விலை : 350 Rs,
கிடைக்குமிடம் :
Ashit Thakkar for Snow White Publication Pvt.Ltd,
Jer Mahal, 532, Kalbadevi Road, Mumbai – 400 002
Tel : 2208 0654, 22058242
இணையதள முகவரி :
மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.
நன்றியோடு, அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா
21 comments:
Friend i want tamil translation book.enga kidaikum
friend iwant Tami translation book wear is
available please informe)
நண்பரே தமிழில் கிடைக்குமா ?
நண்பரே தமிழில் கிடைக்குமா ?
நண்பரே தமிழில் கிடைக்குமா ?
நண்ப..ரே தமிழில் கிடைக்கு.மா ?
நண்ப....ரே தமிழில் கிடைக்கு..மா ?
pc karuppaiah,exportsguide.blogspot
யை வைத்துக்கொண்டு export யை பற்றி சொல்வது நல்ல விஷயம்தான், ஆனால் மற்றவர்கள் நடத்தும் பயிற்சிகளை ஏமாற்றும் பயிற்சி என்று சொல்வது மிக மிக முட்டாள்தனமான பேச்சு, நீங்களும் ஏதாவது ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் ஒரு மூலையில் உட்கார்ந்துட்டு கேட்டுட்டு வந்துட்டு இத எழுதுகிறீர்கள்.நீங்க ஒன்னும் புதுசா கண்டுபிடிக்கல.நீங்க எழுதியதை படிச்ச மட்டும் ஏற்றுமதி செய்து விடமுடியுமா.சத்தியமாக முடியாது...எவ்வளவு விஷயம் நீங்க எழுதினாலும் ,ஏற்றுமதி பற்றி எப்படி பட்ட புத்தகங்கள் வந்தாலும் நேருக்கு நேர் நின்று சொல்லி கொடுப்பதற்கு பயிற்சியாளரும் , பயிற்சி வகுப்பும் தேவை.நீங்க சொன்னபடி எல்லாரும் வருட கணக்கில் college ல் போய் படிக்கமுடியுமா? இது கூட உங்களுக்கு தெரியாதா? பயிற்சி வகுப்புதான் சரியான தேர்வு, அதுவும் ஒரு நாளோ , ஒரு மாதமோ, அது கற்பவர்களின் விருப்பம்.So உங்களால் முடிந்தால் நல்ல விஷயத்தை மட்டும் கொடுங்க ,முடியவில்லையென்றால் நிறுத்தி கொள்ளுங்கள்.
நண்பருக்கு வணக்கம் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் நிறுவனம் ஆரம்பித்தாகி விட்டது IEC CODE பெற்றாகிவிட்டது order கிடைத்து விட்டது
அடுத்து இறக்குமதியாளர் கௌட்கும் பொருளை வாங்க வேண்டும் . வங்கியை அணுகி கடன் பெருவது எப்படி
கடன் பெற்ற பின் பொருளை பேக்கிங் செய்ய எங்கு கொண்டு செல்ல வேண்டும் அடுத்தகட்டமாக அந்த பொனுளை எங்கு கெண்டு செல்ல வேண்டும் என்று விவரிக்குமாறு மிகவும் தாழ்மையடன் கேட்டுக் கெள்கின்றௌன் umashankar.kanna@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பாற்க்கின்றேன் நன்றி.
Thanks Boss.
Kannan avargal keta kelvikkaana bathilai enakum koorungal.
www.gnshkmr@gmail.com
Nandri...
நண்பருக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் நிறுவனம் ஆரம்பித்தாகி விட்டது IEC CODE பெற்றாகிவிட்டது order கிடைத்து விட்டது
அடுத்து இறக்குமதியாளர் கிடைக்கும் பொருளை வாங்க வேண்டும் . வங்கியை அணுகி கடன் பெருவது எப்படி
கடன் பெற்ற பின் பொருளை பேக்கிங் செய்ய எங்கு கொண்டு செல்ல வேண்டும் அடுத்தகட்டமாக அந்த பொருளை எங்கு கெண்டு செல்ல வேண்டும் என்று விவரிக்குமாறு கேட்டுக் கெள்கின்றௌன் mohamedoli2005@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலும் அல்லது+918754636727 What's Apps லும். அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பாற்க்கின்றேன் நன்றி.
Maris king ajithgmail.com pathil soluka pls min export pana evalavu money thavi patum and shipping apti pananum solukab
ஏற்றுமதி செய்வதில் ஆர்வமா?
• எப்படி ஏற்றுமதி நிறுவனத்தை அமைப்பது
• குறைந்த முதலீட்டில் ஏற்றுமதி செய்வது
• புதிய முறையில் ஏற்றுமதி இறக்குமதி எண் ( IE CODE ) வாங்குவது
• இறக்குமதியாளரை கண்டுபிடிப்பது
• என்னனென்ன ஆவணங்கள் தேவை
• பொருளிற்கான காப்பீடினை பெறுவது
• மற்ற வர்த்தக கூட்டமைப்பில் இணைவது
• இலவசமாக வெளிநாட்டு வர்த்தக கூட்டமைப்பில் கலந்து கொள்வது
என அனைத்து தகவல்கலும் அறிய எமது இணைய தளத்தினை அனுகவும் http://www.etrumathisei.com அல்லது +91-99430-97842 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
Karupiah bro, please give your email id
நாம் அனுப்பும் பொருள்இறக்குமதியாலர் கூறியபடி அனுப்பியிருதும்
இறக்குமதியாளர் பொருளின்
தரம் சரியில்லை என கூறு பட்டச் சத்தில் நாம் என்ன
செய்ய வேண்டும்'
நாம் அனுப்பும் பொருள்இறக்குமதியாலர் கூறியபடி அனுப்பியிருதும்
இறக்குமதியாளர் பொருளின்
தரம் சரியில்லை என கூறு பட்டச் சத்தில் நாம் என்ன
செய்ய வேண்டும்'
மிக சிறப்பான சேவை செய்து
வருகிறிர்கள் அனைத்து தகவல்கலையும் ஒரே இடத்தில்
பதிவு செய்து உள்ளீர் மிக்க
நன்றி
நண்பா கருவாடு எற்றுமதி பற்றிய குறிப்பு தாரும்..
இந்த நுலாகம் தமிழாக்கம் கிடைக்குமாம்
Nice blog
https://shopflymeonlinestoe.blogspot.com/2020/02/Handsome-Pump-In-Pakistan.html
ஐயோ பாவம்
Post a Comment