நண்பர்கள் அனைவருக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிப்பு.
இறக்குமதியாலாரை கண்டுபிடிப்பது எப்படி ?
என்னிடம் பலர் கேட்கும் கேள்விகளில் அதிகப்படியானோரால் கேட்கப்பட்ட கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
இறக்குமதியாலரை கண்டுபிடிக்க பல வழிகள் இருக்கிறது. அவை அனைத்தையும் பற்றி வரும் பகுதிகளில் விரிவாக தருகிறேன்.
பலர் நினைக்கிறார்கள் ஏற்றுமதி என்றால் தாங்கள் ஏதோ ஒரு பத்து இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும், தம்மிடம் ஒரு இருபது முப்பது இறக்குமதியாளர் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் நல்ல ஒரு ஏற்றுமதியாளர் ஆக முடியும் என்று.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அப்படி இருந்தால்தான் நீங்கள் ஒரு ஏற்றுமதியாளர் ஆக முடியும் என்று எந்த வரைமுறையும் இல்லை.
காரணம், நீங்கள் ஒரு நாட்டிற்கு மட்டும் ஏற்றுமதி செய்தாலும் அது ஏற்றுமதிதான், பல நாடுகளுக்கு செய்தாலும் அதுவும் ஏற்றுமதிதான்.
உங்களுக்கு ஒரேயொரு இறக்குமதியாளர் அதுவும் நம்பிக்கையான ஒரு இறக்குமதியாளர் கிடைத்து விட்டாலே போதும் நீங்களும் ஒரு ஏற்றுமதியாலர்தான்.
உங்களின் சேவை மட்டும் அவருக்கு பிடித்து விட்டால் போதும் பிறகு உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் நோக்கமே உங்களை ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆக்குவதுதான்.
நீங்களும் ஒரு ஏற்றுமதியாளர் ஆனால் நிச்சயம் எனக்கும் அதில் மகிழ்ச்சியே, அதில் நமது தளத்தின் பங்கும் இருக்குமெனில் எனக்கு அது இன்னும் மகிழ்ச்சியே.
உங்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமாவது நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் பதிவுகள் உதவியாய் இருந்தாலே போதும் அதுவே நமது தளத்திற்கு கிடைத்த வெற்றிதான்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிப்பு என்று சொல்லிவிட்டு உங்களுக்கு தேவையில்லாத எது எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். சரி, பதிவுக்கு வருவோம்.
இறக்குமதியாலாரை கண்டுபிடிப்பது எப்படி ?

.jpg)



