நண்பர்களுக்கு வணக்கம் !
உங்களுக்கு ஏற்றுமதி பற்றி A to Z தெரிந்துகொள்ள வேண்டுமா? வாருங்கள் அப்படியெனில் உங்களுக்காகத்தான் இந்த
பதிவு.
நம்மில் பெரும்பாலோனோருக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய கேள்வி ஏற்றுமதி பற்றி
எப்படி நாம் முழுமையாக தெரிந்து கொள்வது?
என்னிடம் பலர் கேட்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று.
“ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும்
ஏற்றுமதி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டால் என்னால் ஏற்றுமதி பற்றி முழுமையாக
கற்றுக்கொள்ள முடியுமா?” பலர் என்னிடம் இப்படி கேட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் ஒரே பதில் “நிச்சயமாக முடியாது” என்பதுதான். என்னால் இதை ஆணித்தரமாக சொல்ல
முடியும்.
காரணம் இங்கு இருப்பவைகளில் பலவும் ஏற்றுமதி பயிற்சி
நிறுவனங்களாய் அல்ல, அவை உண்மையில் ஏமாற்றும் பயிற்சி நிறுவனங்களாய்தான் உள்ளன.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள
மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதி பற்றி ஏற்றுமதி மேலாண்மை (Export Management) என்ற மூன்றாண்டு பட்டப்படிப்பு, நான்காண்டு
பட்டப்படிப்பு என தனி பட்டப்படிப்பே இருக்கிறது.
அப்படி மூன்றாண்டு, நான்காண்டு படிக்க வேண்டிய
பட்டயப்படிப்பை எப்படி உங்களால் ஒரே நாளிலோ அல்லது ஒரே மாதத்திலோ தெரிந்துகொள்ள
முடியும்.
இதைத்தான் ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் என்ற
பெயரில் பலர் செய்து வருகின்றனர்.
சற்று சிந்தித்து பாருங்கள் ‘எப்படி இது
சாத்தியமென்று?’
இது மருத்துவம் படிக்காமலேயே நீங்கள் மருத்துவர்
ஆகலாம் என்பதைப் போன்றதுதான்.
அப்படியெனில் “ஏற்றுமதி மேலாண்மை (Export Management) படிப்பு படித்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி
செய்ய முடியுமா? அல்லது மற்றவர்களாலும் முடியுமா?” என்று நீங்கள் கேட்கலாம்.
Download As PDF



