Showing posts with label IE Code பெறுவது எப்படி?. Show all posts
Showing posts with label IE Code பெறுவது எப்படி?. Show all posts

பாகம் - 10 IE Code அப்ளிகேஷன் பார்மை எங்கு விண்ணப்பிப்பது ?


நண்பர்களுக்கு வணக்கம் !

IE Code - பெறுவது எப்படி? என்பதின் இறுதி பதிப்பு இது.

அதற்கு முன்பு, IE Code பெறுவது எப்படி? என்பதின் கடந்த பகுதிகளை படிக்காதவர்கள் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.

IE Code பெறுவது எப்படி ? என்பதன் அனைத்து பதிவுகளையும் படிக்க :

IE Code - க்கான அப்ளிகேஷன் பார்மை எங்கு சமர்ப்பிப்பது ?

உங்களது பூர்த்தி செய்யப்பட்ட  IE Code-க்கான அப்ளிகேஷன் பார்மை இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரக (Zonal Joint Directorate General of Foreign Trade ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களது சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கான பத்து இலக்க ஏற்றுமதி இறக்குமதி உரிமைக் கடிதத்தை (IE Code) உங்களது அலுவலக முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
Download As PDF

பாகம் - 9 IE Code விண்ணப்ப படிவத்தை எப்படி பெறுவது?


நண்பர்களுக்கு வணக்கம்! 

இந்த பதிவில் IE Code அப்ளிகேஷன் பார்மான ANF2A -ஐ எப்படி பெறுவது? என்பதைப் பற்றி பார்ப்போம்.

அதற்கு முன் IE Code பெறுவது எப்படி ? என்பதன் முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.


சரி வாருங்கள், IE Code அப்ளிகேஷன் பார்மான ANF2A -ஐ எப்படி பெறுவது? என்பதைப் பற்றி இப்போது  பார்ப்போம்.

முதலில் இந்திய அரசின்  வெளிநாட்டு வர்த்தக இணையதளமான  http://www.dgft.gov.in/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
Download As PDF

பாகம் - 8 வங்கியில் நடப்பு கணக்கு துவங்குவது எப்படி?


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பகுதியில் வங்கியில் நடப்பு கணக்கு (Current Account) துவங்குவது எப்படி ?என்பது பற்றி பார்பபோம்.

ஏற்றுமதி உரிமத்திர்கான IE Code பெருவதற்கு வங்கி கணக்கு என்பது மிக மிக முக்கியமான ஒன்று.

அதற்கு இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏதேனும் ஒன்றில் உங்களது நிறுவனப் பெயரில் நடப்பு கணக்கு ஒன்று தொடங்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விவரங்கள் அறிய கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் (Nationalized Bank) :

நீங்கள் எந்த வங்கியில் நடப்புக் கணக்கு துவங்க நினைக்கிறீர்களோ முதலில் அந்த வங்கிக்கு நேரில் சென்று அந்த வங்கி அலுவலரிடம் அது குறித்த விபரங்களை கேட்டரிந்து கொள்ளுங்கள்.
Download As PDF

பாகம் - 7 சிறு தொழில் மையம் ( SSI )


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் SSI என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
     
SSI - Small Scale Industries ( சிறு தொழில் மையம் ) :

இவைகளின் அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி என அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களிலும் இருக்கிறது.

இவற்றில் உங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள மிக வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும், மானியம் பெருவதர்க்கும் இது பெரிதும் உதவும்.

சரி, வாருங்கள் சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி ? என்பதை பற்றி பார்ப்போம்.

இவற்றில் பதிவு செய்வதற்கு முதலில் இதன் இணையதளமான www.msmeonline.tn.gov.in  என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.

கீழ்கண்டவாறு ஒரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.
Download As PDF

பாகம் - 6 பான் கார்டு (PAN - PAN CARD)


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் பான்கார்டு (PAN-Permanent Account Number) பெறுவது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஏற்றுமதி உரிமத்திர்க்கான IE CODE பெறுவதற்கு தேவைப்படும் டாக்குமென்டுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த பான்கார்டு (PAN-Permanent Account Number) மற்றும் பான்கார்டு கவரிங் லெட்டர்.


பான்கார்டு பெற தேவைப்படும் ஆவணங்கள் :

  • உங்களுடைய அடையாளச் சான்று ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் காபி, 
  • ஒரு கலர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

இதற்கென உங்கள் பகுதியில் உள்ள அலுவலகத்திலோ அல்லது பான் கார்டு பெற்றுத்தரும் தரகர்களிடமோ சென்று விண்ணப்பிக்கலாம்.
Download As PDF

பாகம் - 5 ரப்பர் ஸ்டாம்ப் சீல்


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் நாம் நமது ஏற்றுமதி நிறுவனத்திற்கு என என்ன மாதிரியான ரப்பர் ஸ்டாம்ப் சீல்கள் தேவைப்படும் என்றும் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.

பொதுவாக நமக்கு நான்கு வகையான ரப்பர் ஸ்டாம்ப் சீல்கள் தேவைப்படும். அவைகள் :
   
1. அட்ரஸ் சீல், (ADDRESS SEAL)
2. ஒவல் சீல் அல்லது ரௌன்ட் சீல், (OVAL SEAL OR ROUND SEAL)
3. ஃபார் சீல், (FOR SEAL)
4. ஏர்மெய்ல் சீல் (AIR MAIL SEAL)

சரி, இவைகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
Download As PDF

பாகம் - 4 லெட்டர் ஹெட் தயார் செய்வது எப்படி?

 
நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் உங்களது ஏற்றுமதி நிறுவனத்திற்கான லெட்டர் ஹெட் எப்படி இருக்க வெண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலில் உங்களது நிறுவனத்திற்கு என அழகான லோகோ ஒன்றை டிசைன் செய்து கொள்ளுங்கள். இதை கம்ப்யூட்டர் சென்டர்களிலும் கூட டிசைன் செய்து தருவார்கள்.

நீங்கள் டிசைன் செய்யும் லோகோவானது முடிந்தவரை நீங்கள் எந்த பொருளை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களோ அவை சம்பத்தப்பட்டவையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு ஒருவர் பழங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தேடுத்திருப்பார்.ஆனால் அவரது ஏற்றுமதி நிறுவனத்திர்க்கான லோகோவைப் பார்த்தால் அதில் பழங்களுக்குப் பதிலாக மலர்களோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றை  வரைந்திருப்பார்.

உங்களது லோகோவே நீங்கள் என்ன பொருளை ஏற்றுமதி செய்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதாக இருக்க வேண்டும்.

அதற்காகத்தான் சொல்கிறேன் அவர் செய்த அதே தப்பை நீங்களும் செய்யாதீர்கள் என்று.உங்களது நிறுவனத்திற்கு லோகோ டிசைன் செய்யும்போது இதையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, லோகோ டிசைன் செய்தாகி விட்டது அடுத்தது என்ன?
Download As PDF

பாகம் - 3 ஈமெயில்,லேண்ட்லைன்,ஃபேக்ஸ்

   
நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் நமது நிறுவனத்திற்கான ஈமெய்ல், லேண்ட்லைன் மற்றும் ஃபேக்ஸினை பற்றி பார்ப்போம்.

நாம் ஏற்றுமதி துறை என்று எடுத்து கொண்டால் ஈமெய்ல், ஃபேக்ஸ் இரண்டும் தொலை தொடர்புக்கான அத்தியாவச தேவைகளில் மிக முக்கியமான ஒன்று.

நீங்கள் உங்களது நிறுவனத்துக்கான பெயரை தேர்ந்தெடுத்த பின் GMail, Yahoo போன்ற ஏதேனும் ஒரு வலைதளத்தில், உங்களது நிறுவனப் பயன்பாட்டிற்காக, உங்களது நிறுவனப் பெயரில்  ஈமெய்ல் ஐடி ஒன்றை தொடங்கி கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு : sunexports@gmail.com, moonexports@yahoo.com

அடுத்ததாக, உங்கள் நிறுவன பயன்பாட்டிற்காக லேண்டலைன் தொலைபேசி மற்றும் ஃபேக்ஸ் வசதியினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதில்  BSNL லேண்ட்லைன் என்றால் சற்று சிறப்பு.
Download As PDF

பாகம் - 2 நிறுவனத்திற்கு பெயர் வைப்பது எப்படி?


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் உங்களது ஏற்றுமதி நிறுவனத்திற்கு எப்படி பெயர் வைப்பது எப்படி ? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் உங்களது நிறுவனப் பெயர் பொதுவாக  எல்லோரும் புரியும் படியாக, குறிப்பாக இறக்குமதியாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருக்க வேண்டும்.
 
பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த வார்த்தைகளையே நிறுவனப் பெயராய் சூட்டுங்கள். உதாரணமாக AERO,SUN,SKY போன்றவை.

உங்களின் விருப்பமான பெயர்கள், இன்ஷியல்கள் போன்றவைகளைக் கூட தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதில் எந்த வரை முறையும் இல்லை.

உதாரணம் KALAI,KARAN,STS போன்றவை.
Download As PDF

பாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி?

 
நண்பர்களுக்கு வணக்கம்!

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளம் தங்களை அன்புடன் வரவேகிறது.

நாம் நன்றாயிருந்தால் போதும் 
என்று நினைப்பது சுயநலம்...! 
நாடும் நன்றாயிருக்க வேண்டும் 
என்று நினைப்பது பொதுநலம்...! 

இதில் இரண்டாவது வகைதான் இந்த ஏற்றுமதி துறை. இத்துறையை தேர்ந்தெடுத்து இருப்பதிலேயே உங்களின் பொதுநலம் எனக்கு தெரிகிறது. அதற்கே உங்களுக்கு முதலில் கோடானுகோடி நன்றி சொல்ல வேண்டும்.

காரணம், ஏற்றுமதியில்  நாமும் நலம் பெறுவோம் நாடும் வளம் பெரும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சரி நண்பர்களே, வாருங்கள் பதிவைப் பார்ப்போம்.
Download As PDF