Incoterms - International Commercial Terms


நண்பர்களுக்கு வணக்கம் !

ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது எப்படி ?

இந்த கேள்விக்கு உங்களுக்கு விடை தெரிய வேண்டுமாயின் முதலில் சர்வதேச வர்த்தக விதிமுறைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

ஏற்றுமதி துறையைப் பொறுத்தவரையில் விலை நிர்ணயம் என்பது மிகமிக முக்கியம். காரணம் ஏற்கனவே சொல்லியது போல் ஏற்றுமதி துறை ஒன்றும் அவ்வளவு எளிதான துறை அல்ல.

இருந்தும் நம்மில் பெரும்பாலானோர் ஏற்றுமதி துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முதல் கராணம் இதில் லாபம் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணம்தான்.

இதில் நமக்கு மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது.

"யார் ஒருவர் எந்த ஒரு செயலையும் லாபம் ஒன்றையோ குறிக்கோளாகக் கொண்டு துவங்குகுகிறாரோ இறுதியில் நிச்சயம் அது தோல்வியில்தான் முடியும்" இதை நான் சொல்லவில்லை -

இன்று இணைய உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் Facebook-ஐ  உருவாக்கிய மார்க் ஜுக்கெர்பெர்க் சொன்னது.

ஆம்! எந்த ஒரு செயலையும் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு துவங்காமல்  முதலில் அவற்றை கற்றுக்கொள்ள நினையுங்கள்.

வெற்றி நிச்சயம் !

"கற்க கற்க நமக்கு 
கடல் கூட சிறு துளிதான்...!"

Incoterms - International Commercial Terms

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இயங்கி வரும் ICC எனப்படும் International Chamber of Commerce - ஆல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் உலகளாவிய விலை நிர்ணய முறையைக் கொண்டு வர முயற்சித்ததன் பலன்தான் இந்த Incoterms எனப்படும் சர்வதேச வர்த்தக விதிமுறை கொள்கை.

இவை மொத்தம் பதிமூன்று வகைப்படும், அவைகள் :
Download As PDF

நன்றி ! நன்றி !! நன்றி !!!


நண்பர்களுக்கு வணக்கம் !

நமது "ஏற்றுமதி வழிகாட்டி" தளம் தற்போது ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வளர்ந்திருப்பதில் பெருமையிலும் பெருமை கொள்கிறது.

இந்த பெரியதொரு வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்து, தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நமது "ஏற்றுமதி வழிகாட்டி" தளத்தின் நெஞ்சார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!

"தொலை வானமும் தொட்டு விடலாம்
தொடர்ந்திருங்கள் எம்மோடு..!"

நன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

Export Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்


நண்பர்களுக்கு வணக்கம் !

உங்களுக்கு ஏற்றுமதி பற்றி A to Z தெரிந்துகொள்ள வேண்டுமா? வாருங்கள் அப்படியெனில் ­உங்களுக்காகத்தான் இந்த பதிவு.

­நம்மில் பெரும்பாலோனோருக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய கேள்வி ஏற்றுமதி பற்றி எப்படி நாம் முழுமையாக தெரிந்து கொள்வது?

என்னிடம் பலர் கேட்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று.

“ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் ஏற்றுமதி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டால் என்னால் ஏற்றுமதி பற்றி முழுமையாக கற்றுக்கொள்ள முடியுமா?” பலர் என்னிடம் இப்படி கேட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் ஒரே பதில் “நிச்சயமாக முடியாது” என்பதுதான். என்னால் இதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.

காரணம் இங்கு இருப்பவைகளில் பலவும் ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்களாய் அல்ல, அவை உண்மையில் ஏமாற்றும் பயிற்சி நிறுவனங்களாய்தான் உள்ளன.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதி பற்றி ஏற்றுமதி மேலாண்மை (Export Management) என்ற மூன்றாண்டு பட்டப்படிப்பு, நான்காண்டு பட்டப்படிப்பு என தனி பட்டப்படிப்பே இருக்கிறது.

அப்படி மூன்றாண்டு, நான்காண்டு படிக்க வேண்டிய பட்டயப்படிப்பை எப்படி உங்களால் ஒரே நாளிலோ அல்லது ஒரே மாதத்திலோ தெரிந்துகொள்ள முடியும்.

இதைத்தான் ஏற்றுமதி பயிற்சி நிறுவனங்கள் என்ற பெயரில் பலர் செய்து வருகின்றனர்.

சற்று சிந்தித்து பாருங்கள் ‘எப்படி இது சாத்தியமென்று?’

இது மருத்துவம் படிக்காமலேயே நீங்கள் மருத்துவர் ஆகலாம் என்பதைப் போன்றதுதான்.

அப்படியெனில் “ஏற்றுமதி மேலாண்மை (Export Management) படிப்பு படித்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியுமா? அல்லது மற்றவர்களாலும் முடியுமா?” என்று நீங்கள் கேட்கலாம்.
Download As PDF

ஏற்றுமதியில் தடைகளும் அதன் வகைகளும்


நண்பர்களுக்கு வணக்கம் !

ஏற்றுமதி தொழிலில் ஈடுபட நினைக்கும் நபர்களில் பெரும்பாலானோரின் மனதில் ஏற்படும் பொதுவான கேள்விகளுள் இதுவும் ஒன்று. 

"எந்த பொருளை ஏற்றுமதி செய்வது ?"

இவைப்பற்றி ஏற்கனவே ஏற்றுமதி செய்வதற்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற பதிவில் விபரமாக தந்திருக்கிறேன்.

இருந்தும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இந்த பதிவு.

ஏற்றுமதி செய்வதற்கான பொருளை தேர்ந்தெடுக்கும் முன், ஏற்றுமதி செய்ய என்னென்ன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற விபரங்கள் கிடைத்தால் இன்னும் நன்றாயிருக்கும் அல்லவா ?

அவைபற்றிய பதிவுதான் இது. சரி, வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.

பொதுவாக எந்த ஒரு நாடும் அந்த நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காரணம், உள்நாட்டு தேவை. 

எந்த ஒரு பொருளாயினும் அது அந்நாட்டின் தேவையான கையிருப்பை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும்.

அதவாது உற்பத்தி அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.

காரணம், உற்பத்தியாகும் பொருட்களின் அளவு குறைவாக இருக்கும் நிலையில் அந்த பொருளை ஏற்றுமதிக்கு அனுமதித்தால் அதன் உள்நாட்டின் விலை கணிசமாக உயர்த்து மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்படும்.

உதாரணத்திற்கு அரிசியை எடுத்துக்கொள்வோம். இந்திய அரசு அடிக்கடி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பொருட்களில் இதுவும் ஓன்று.
Download As PDF

அமெரிக்காவுக்கு 500 டன் மாம்பழம் ஏற்றுமதி


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மாம்பழத்தின் அளவு இந்த ஆண்டில் சாதனை அளவை எட்டும் என கணிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, இதுவரை இல்லாத சாதனை அளவாக 500 டன்கள் வரை மாம்பழங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாக உள்ளதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மாம்பழத்துக்கு அதிகரித்துள்ள தேவை, மற்றும் ஏற்றுமதி தரத்திலான மாம்பழங்களின் விளைச்சல் போன்றவை காரணமாக அதிக ஏற்றுமதி சாத்தியம் என்று  APEDA வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 209 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியானது.

இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் வார நிலவரப்படி, 90 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. 

அல்ஃபோன்சா மற்றும் கேசர் ரக மாம்பழங்கள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மாம்பழத்தின் அளவு இந்த ஆண்டில் சாதனை அளவை எட்டும் என கணிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, இதுவரை இல்லாத சாதனை அளவாக 500 டன்கள் வரை மாம்பழங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாக உள்ளதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மாம்பழத்துக்கு அதிகரித்துள்ள தேவை, மற்றும் ஏற்றுமதி தரத்திலான மாம்பழங்களின் விளைச்சல் போன்றவை காரணமாக அதிக ஏற்றுமதி சாத்தியம் என்று ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 209 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியானது.

இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் வார நிலவரப்படி, 90 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. அல்ஃபோன்சா மற்றும் கேசர் ரக மாம்பழங்கள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன.

நன்றி, புதிய தலைமுறை - மே 13,2013

Download As PDF

இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் - FIEO

நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் FIEO (Federation of Indian Export Organization) என்று அழைக்கப்படும் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் பற்றியும், அதன் நடைமுறைகள் மற்றும் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.


 அதற்கு முன்னர் உங்களிடம் சின்னதாய் ஒரு பகிர்வு.

இங்கு “ஏற்றுமதி இறக்குமதி உரிமம் எண் (IE Code) பெரும் அனைவரும் ஏற்றுமதியில் ஈடுபடுகிறார்களா...?” என்று கேட்டால் “இல்லை” என்றுதான் சொல்லவேண்டும்.

1997-ஆம் ஆண்டுக்கு முன் வரை நாம் IE Code பெறுவதாயின் மத்திய ரிசர்வ் வங்கியிடம்தான் (Reserve Bank of India) விண்ணப்பிக்க வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் இன்று அந்த வேலையை DGFT (Director General of Foriegn Trade) என்று அழைக்கப்படும் இந்திய வெளிநாட்டு வர்த்தகத்துறை அலுவலகம் செய்து வருகிறது.

ஆரம்பத்தில் IE Code பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 1,000 ரூபாயாக இருந்தது. எவரும் IE Code பெற விண்ணப்பிக்க வில்லை.
Download As PDF

மாதிரி அனுப்புவது எப்படி? (Sample)


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் மாதிரி (Sample) அனுப்புவது எப்படி? என்பதைப்பற்றி பார்ப்போம்.

எந்த ஒரு பொருளுக்கும் அதன் தரம் என்பது மிக முக்கியம். அதுவும் ஏற்றுமதி துறைக்கு அது இன்னும் மிக முக்கியம்.


காரணம், எந்த ஒரு இறக்குமதியாளரும் உங்களது பொருளின் தரம் தெரியாமல் உங்களுக்கு ஆர்டர் கொடுக்க மாட்டார்கள்.

முதலில் உங்கள் மேலும் உங்களது நிறுவத்தின் மேலும் அவருக்கு நம்பிக்கை வரவேண்டும். அடுத்து உங்களது பொருளுக்கான விலையை அவர் ஒப்புக்கொள்ள கொள்ள வேண்டும். 

பிறகு, உங்களது பொருளின் தரம் அவருக்கு பிடித்திருக்க வேண்டும்.

அடுத்துதான் உங்களுக்கு ஆர்டர் தருவதா? வேண்டமா? என்பதை  அவர் முடிவு செய்வார். 

எந்த ஒரு இறக்குமதியாளரும் உங்களுக்கு ஆர்டர் தரும் முன் உங்களது பொருளின் தரம் அறியவேண்டி, முதலில் அந்த பொருளின் மாதிரியை (Sample) தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்பார்கள்.
Download As PDF

“ஏற்றுமதி செய்யலாம் வாங்க”


நண்பர்களுக்கு வணக்கம் !

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் பதிவுகள் அனைத்தும் தன்னம்பிக்கை மாத இதழான வெற்றிச்சிகரம் மாத இதழில் வெளிவந்து கொண்டிருப்பது தாங்கள் அறிந்த விஷயமே.

மேலும் தற்போது ஏப்ரல் 2013 இதழிலிருந்து “ஏற்றுமதி செய்யலாம் வாங்க” என்ற தலைப்பினில் ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் ஏற்றுமதி பற்றிய புதிய தொடர் வெளிவரத் துவங்கியுள்ளது.

இத்தொடரில் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிப்பதிலிருந்து நீங்கள் ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாலர் ஆவது வரை அனைத்து விபரங்களும், நுணுக்கங்களும் தொடர்ந்து வரவிருக்கின்றன.

இந்த இனியதொரு வாய்ப்பை முன்வந்து அளித்த “வெற்றிச்சிகரம்” மாத இதழுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் கோடானுகோடி நன்றிகள்!.

வெற்றிச்சிகரம் ஏப்ரல்-2013 இதழில் வெளிவந்திருக்கும் “ஏற்றுமதி செய்யலாம் வாங்க” தொடரின் முதல் பாகத்தை படிக்க விரும்புவோர் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளவும்.


நன்றியோடு, அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா

Download As PDF

ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?


நண்பர்களுக்கு வணக்கம்!

இந்த பதிவில் ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் முறைகள் பற்றி பார்ப்போம்.

ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?

ஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது.

காரணம் இங்கு எல்லோருக்கும் ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ தெரிந்திருக்கும் என்று கூற முடியாது. அதற்காக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்று நினைத்து விடாதிர்கள்.

ஆங்கிலம் என்பது நம் அறிவு சம்பதப்பட்ட விஷயம் ஒன்றுமல்ல. மற்ற மொழிகளைப் போன்று ஒரு சாதாரண மொழி அவ்வளவுதான்.

எனவே ஆங்கிலம் தெரியவில்லையே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.

நண்பர்கள் இருவர் ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் சிறுவன் ஒருவன் அபாரமாய் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தான்.

அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களும் பேசிக்கொண்டார்கள்,
Download As PDF

தமிழ் புத்தாண்டு - சிறப்பு பதிப்பு


நண்பர்கள் அனைவருக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிப்பு.


இறக்குமதியாலாரை கண்டுபிடிப்பது எப்படி ?

என்னிடம் பலர் கேட்கும் கேள்விகளில் அதிகப்படியானோரால் கேட்கப்பட்ட கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

இறக்குமதியாலரை கண்டுபிடிக்க பல வழிகள் இருக்கிறது. அவை அனைத்தையும் பற்றி வரும் பகுதிகளில் விரிவாக தருகிறேன்.

பலர் நினைக்கிறார்கள் ஏற்றுமதி என்றால் தாங்கள் ஏதோ ஒரு பத்து இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும், தம்மிடம் ஒரு இருபது முப்பது இறக்குமதியாளர் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் நல்ல ஒரு ஏற்றுமதியாளர் ஆக முடியும் என்று.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அப்படி இருந்தால்தான் நீங்கள் ஒரு ஏற்றுமதியாளர் ஆக முடியும் என்று எந்த வரைமுறையும் இல்லை.

காரணம், நீங்கள் ஒரு நாட்டிற்கு மட்டும் ஏற்றுமதி செய்தாலும் அது ஏற்றுமதிதான், பல நாடுகளுக்கு செய்தாலும் அதுவும் ஏற்றுமதிதான்.

உங்களுக்கு ஒரேயொரு இறக்குமதியாளர் அதுவும் நம்பிக்கையான ஒரு இறக்குமதியாளர் கிடைத்து விட்டாலே போதும் நீங்களும் ஒரு ஏற்றுமதியாலர்தான்.

உங்களின் சேவை மட்டும் அவருக்கு பிடித்து விட்டால் போதும் பிறகு உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் நோக்கமே உங்களை ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆக்குவதுதான்.

நீங்களும் ஒரு ஏற்றுமதியாளர் ஆனால் நிச்சயம் எனக்கும் அதில் மகிழ்ச்சியே, அதில் நமது தளத்தின் பங்கும் இருக்குமெனில் எனக்கு அது இன்னும் மகிழ்ச்சியே.

உங்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமாவது நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் பதிவுகள் உதவியாய் இருந்தாலே போதும் அதுவே நமது தளத்திற்கு கிடைத்த வெற்றிதான்.

தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிப்பு என்று சொல்லிவிட்டு உங்களுக்கு தேவையில்லாத எது எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். சரி, பதிவுக்கு வருவோம்.

இறக்குமதியாலாரை கண்டுபிடிப்பது எப்படி ?

Download As PDF

மின் புத்தகம் - Electronic Book (PDF Book)


நண்பர்களுக்கு வணக்கம் !

கற்றது கையளவு கல்லாதாது உலகளவு...

ஏற்றுமதி துறை என்றில்லாமல் ஒவ்வொரு துறையிலும் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் எவ்வளவோ இருக்கின்றன.

இன்றைய நவீன உலகில் எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ளவும், தெரிந்துகொள்ளவும் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன.

ஆனால், பலர் அதைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆர்வமிருந்தும், ஆசையிருந்தும் அதற்கான வழி தெரியாமல் திசைமாறி விடுகின்றனர்.

தேடல் இல்லா மனிதன் என்றுமே முழுமையாக மாட்டான்...

தேடுங்கள், விடாது தேடுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்.

மின் புத்தகம் - Electranic Book (PDF Book) 


கணிணி பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில் E-Book என்று அழைக்கப்படும் மின் புத்தகங்களின் பயன்பாடும் அத்தியாவசயமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

காரணம், ஆயிரமாயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை கூட அரை நிமிடத்தில் உங்களது கணிணியிலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இதனைப் பயன்படுத்துவதும் கூட மிக எளிது.

இவ்வளவு ஏன் வளர்ந்த பல நாடுகளின் பள்ளி, கல்லூரிகள் கூட இப்போதெல்லாம் இந்த மின் புத்தகங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மற்றத் துறைகளைப் போன்றதல்ல ஏற்றுமதி துறை இதில் தினம் தினம் உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.

நமது ஏற்றுமதி வழிகாட்டி தள நண்பர்களுக்காக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில் உள்ள நடைமுறைகள், வழிமுறைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து மின் புத்தக வடிவில் நமது தளத்தில் இனி தொடர்ந்து வெளிவரவிருக்கின்றன.
Download As PDF

Useful Links: India and International

Name of the Organizations
URL
     India (Government)
     APEDA
     Agricultural Marketting Information Network,Ministry of Agriculture
     Agri Commodities In India
     Department of Agriculture and Cooperation, Ministry of Agriculture
     Department of Animal husbandry, Dairy & Fishries, Ministry of Agriculture
     Department of Commerce, Ministry of Commerce & Industry
     DACNET, Ministry of Agriculture
     Food Corporation of India
     Forward Market Commision
     Ministry of Food Processing Industries
     MPEDA
     National Multi-Commodity Exchange of India Ltd
     NAFED
     National Horticulture Board
     Spices Board
     National Portal of India
Download As PDF

பருப்பு ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு


மத்திய அரசு பருப்பு ஏற்றுமதி தடையை மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்துள்ளது. அதேசமயம் சிலவகை பருப்புகள் ஏற்றுமதிக்கு மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இவற்றிற்கான உச்சவரம்பு 10,000 டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில், பருப்பு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

அதேசமயம் தேவையை விட உற்பத்தி குறைவாக உள்ளதால் தேவையை ஈடுசெய்ய 30 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டு தேவைப்பாட்டைக் கருதி கடந்த 2006–ஆம் ஆண்டில் முதற்கட்டமாக ஆறு மாதங்களுக்கு பருப்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. 

இது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு இறுதியாக 2013 மார்ச் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இது தற்போது 2014 மார்ச் 31–ந் தேதி வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Download As PDF

வெற்றிச்சிகரம் - மாத இதழ்


நண்பர்களுக்கு வணக்கம் !

தங்களிடம் சின்னதாய் ஒரு பகிர்வு.

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் அனைத்துப் பகுதிகளும் இனி புத்தக வடிவில் !


புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாத இதழான “வெற்றிச்சிகரம்” இதழில் நமது தளத்தின் பதிவுகள் அனைத்தும் கட்டுரை வடிவில் தொடர்ந்து வெளிவரவிருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாத வெற்றிச்சிகரம் இதழில் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் முதல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.



இந்த இனியதொறு வாய்ப்பை தேடிவந்து அளித்த “வெற்றிச்சிகரம்” மாத இதழுக்கும், தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் கோடானுகோடி நன்றி ! நன்றி !! நன்றி !!!

சந்தா செலுத்தி பெற விரும்புவோர் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து கிடைக்கும் சந்தா படிவத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

வெற்றிச்சிகரம் மாத இதழ் சந்தா படிவம்

என்றென்றும் அன்புடன் - பி.சி.கருப்பையா

Download As PDF

சீரகம் ஏற்றுமதியில் இந்தியா


நடப்பு 2012-13ம் நிதியாண்டில், சீரகம் ஏற்றுமதியில் இந்தியா, புதிய சாதனை படைக்க உள்ளது. தற்போது, நிர்ணயித்த இலக்கை விஞ்சி, சீரகம் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.

இந்திய சமையலில், முக்கிய அங்கம் வகிக்கும் சீரகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் விளைகிறது. இந்திய சீரகத்திற்கு, உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

உலக நிலவரம் : சர்வதேச சீரகச் சந்தையில், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்பு தான் அதிக அளவில் இருந்தது. 

இந்நிலையில், சிரியாவின் உள்நாட்டு கலவரமும், துருக்கியில் நிலவும் அரசியல் சூழலும், அந்நாடுகளின் சீரக ஏற்றுமதியை பெரிதும் பாதித்துள்ளன.

உலக வேளாண் பொருட்கள் சந்தையில், இந்நாடுகளின் சீரகம் அளிப்பு குறைந்துள்ளது. இந்த இடைவெளியை இந்தியா சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அதிக அளவில் சீரகத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

புதிய வரத்து : இந்திய நறுமண பொருள்கள் வாரியம், நடப்பு நிதியாண்டில், 45 ஆயிரம் டன், சீரகம் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது.
Download As PDF

தொழில் கடன் உதவி (Loan)


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் வங்கியில் கொடுக்கப்படும் பொதுவான தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன் முறைகள் பற்றியும் அவைகளை எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் பார்ப்போம்.




தொழில் தொடங்கிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. 

டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே.
Download As PDF