நண்பர்களுக்கு வணக்கம் !
ஏற்றுமதி தொழிலில் ஈடுபட நினைக்கும் நபர்களில் பெரும்பாலானோரின் மனதில் ஏற்படும் பொதுவான கேள்விகளுள் இதுவும் ஒன்று.
"எந்த பொருளை ஏற்றுமதி செய்வது ?"
இவைப்பற்றி ஏற்கனவே ஏற்றுமதி செய்வதற்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற பதிவில் விபரமாக தந்திருக்கிறேன்.
இருந்தும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இந்த பதிவு.
ஏற்றுமதி செய்வதற்கான பொருளை தேர்ந்தெடுக்கும் முன், ஏற்றுமதி செய்ய என்னென்ன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற விபரங்கள் கிடைத்தால் இன்னும் நன்றாயிருக்கும் அல்லவா ?
அவைபற்றிய பதிவுதான் இது. சரி, வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.
பொதுவாக எந்த ஒரு நாடும் அந்த நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம், உள்நாட்டு தேவை.
எந்த ஒரு பொருளாயினும் அது அந்நாட்டின் தேவையான கையிருப்பை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும்.
அதவாது உற்பத்தி அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.
காரணம், உற்பத்தியாகும் பொருட்களின் அளவு குறைவாக இருக்கும் நிலையில் அந்த பொருளை ஏற்றுமதிக்கு அனுமதித்தால் அதன் உள்நாட்டின் விலை கணிசமாக உயர்த்து மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்படும்.
உதாரணத்திற்கு அரிசியை எடுத்துக்கொள்வோம். இந்திய அரசு அடிக்கடி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பொருட்களில் இதுவும் ஓன்று.






